Published:Updated:

``ஈழத் தமிழர்களில் விமர்சகர்கள் அளவுக்குப் படைப்பாளிகள் பெருகவில்லை!'' - நிலாந்தன்

இலங்கை எழுத்தாளர் நிலாந்தன்
News
இலங்கை எழுத்தாளர் நிலாந்தன்

இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து ஈழ எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகரான நிலாந்தனை பேட்டிக்காக சந்தித்தோம்.

உள்நாட்டுப் போரால் சிதறுண்ட இலங்கையில், அரசியல் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை. அரசியல் குழப்பம், ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றைக் கடந்து தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு இலங்கை தயாராகி வருகிறது. இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய நிலை, காணாமல் போனவர்கள் பிரச்னை, தமிழ்க் கட்சிகளின் எதிர்காலம் போன்ற கேள்விகளை சென்னை வந்திருந்த ஈழ எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தனிடம் முன்வைத்தோம்.

"இலங்கையில் போர்க்கால கட்டுப்பாடுகள் மீண்டும் வருகின்றன. தனி ஈழம் என்பது நிறைவேறாத ஒரு கனவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதால், ராஜபக்சேக்களே தொடர்ந்து வெற்றிபெறுவர். தமிழர்களுக்கு ஒருங்கிணைந்த தலைமை இல்லை; மாற்று அணிக்கான பணிகளும் தொய்வுடனே நடந்துவருகின்றன. இந்தியா மீதும் இலங்கைத் தமிழர்களிடத்தில் அதிருப்தி நிலவுகிறது” போன்றவற்றைப் பதிவு செய்தார் நிலாந்தன். அவர் மேலும் பேசியதிலிருந்து...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘போருக்குப் பிறகு, தமிழர்களிடத்திலும் சர்வதேச அரங்கிலும் ஒப்புக்கொண்ட கடமைகளை இலங்கை அரசு சரியாகச் செய்துள்ளதா?’’

நிலாந்தன்
நிலாந்தன்

"கடந்த ஐந்தாண்டுகளில் மேற்குலகின் ஆதரவுபெற்ற ரணில் ஆட்சியில், சில விஷயங்கள் பெயரளவில் முன்னெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அப்படியான கண்துடைப்பான நடவடிக்கைகள்கூட 2018 ஆட்சிக் குழப்பத்தால் நின்றுவிட்டன. தமிழர்கள் முதன்மையாகக் கேட்ட தீர்வு, போர்க்குற்றங்களுக்கான பரிகார நீதிதான். ஆனால், சர்வதேசமும் ஐ.நா-வும் தமிழர்களுக்கு நிலைமாறு நீதியைத்தான் வழங்கின. தமிழர்கள் கேட்ட தீர்வு முன்வைக்கப்படவே இல்லை. தமிழர்களுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளும் தற்போது நீர்த்துப்போயுள்ளளன. ஐ.நா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கோத்தபய ராஜபக்‌சே அறிவித்துவிட்டார். தமிழர்களுக்கு வழக்கம்போல இழப்புதான்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும், இந்திய அரசிடம் அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?”

நிலாந்தன்
நிலாந்தன்

‘‘தமிழ் மக்களின் வாக்குகள் இலங்கையில் மூன்றாகப் பிரிகின்றன. ஆனால், சிங்களவர்களின் ஓட்டுகள் அப்படி அல்ல. அவர்களின் வாக்குகள் ராஜபக்சேவுக்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலையீடோ ஐ.நா-வின் தலையீடோ ஈழத்தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத்தரவில்லை என்கிற விமர்சனங்கள் உள்ளன. இந்தியத் தலையீட்டால் கொண்டுவரப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களை அரசியல் நீக்கம் செய்வது, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மக்களை அரசியல்மயமாக்குவதே உடனடித் தேவை. ஆனால், அதற்கான கட்டமைப்போ தலைமையோ தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ராஜபக்சே எதிர்ப்பு மட்டுமே தமிழர்களை ஒருங்கிணைக்கிறது.’’

‘‘இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் எந்தெந்த வகைகளில் அதிகமாகியிருக்கிறது, அதன் தாக்கம் என்ன?’’

‘‘இலங்கை முழுவதுமாக சீனமயமாக்கப்பட்டுவருகிறது. இந்தியாவை எதிர்கொள்ள சீனாவுக்கு இலங்கையில் இருப்பு தேவைப்படுகிறது. அதை இந்தியா விரும்பாது. சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தமிழர்களின் ஆதரவுதான் தேவைப்படும். அதுதான் இலங்கையின் எதார்த்தமாக உள்ளது.’’

‘‘இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கையில் தமிழர்களின் வாழ்வியலில் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் எந்தவிதமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன?’

நிலாந்தன்
நிலாந்தன்

‘‘2009-க்குப் பின், இனப் படுகொலையை முழுமையாக ஆவணப்படுத்தக்கூடிய நாவல் ஒன்றும் வரவில்லை. ஈழத் தமிழர்கள் மத்தியில் விமர்சகர்கள் பெருகிய அளவுக்கு படைப்பாளிகள் பெருகவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் மட்டுமே வந்துள்ளன. இனப் படுகொலையின் நினைவுகளைத் தமிழர்கள் புத்திப்பூர்வமாகவும் அழகியல்ரீதியாகவும் ஆவணப்படுத்தவில்லை.’’

''பிரபாகரனின் நினைவு, ஈழத் தமிழர்களிடத்தில் எந்த அளவில் இருக்கிறது?’’

‘‘பிரபாகரனின் நினைவு, ஈழத் தமிழர்களிடமிருந்து எந்தக் காலத்திலும் அகலாது. சிங்களவர்களிடத்திலும் பிரபாகரனின் நினைவு, சிங்களப் பேரினவாதிகளால் தக்கவைக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரபாகரனை வீழ்த்தி, புலிகளை வென்றதைச் சொல்லிச்சொல்லித்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் அரசியல் செய்கிறார்கள். ஆகவே, சிங்களவர்களுக்கும் பிரபாகரனின் நினைவு தேவைப்படுகிறது.’’