Published:Updated:

`உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு; 20,000 டன் எண்ணெய்; சிவப்பு நிறமான ஆறு!’- ரஷ்யாவில் அவசர நிலை

ரஷ்ய விபத்து
ரஷ்ய விபத்து

`1994 இல் நடந்த எண்ணெய்க் கலப்பு விபத்திற்குப் பிறகு இந்த விபத்தே மிகப் பெரிய எண்ணெய்க் கலப்பு விபத்தாகும்'.

ரஷ்யாவில் 20,000 டன் எண்ணை ஆற்றில் கலந்ததையடுத்து ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவசரநிலை பிறப்பித்துள்ளார். சைபீரியாவின் நோர்ல்ஸ்க் (Norilsk) நகரில் உள்ள நோர்நிக்கல் (Nornickel) ஆலையில் எரிபொருள் தொட்டி உருக்குலைந்ததே இதற்குக் காரணம் என்று கூறுகிறார் அந்த ஆலையின் இயக்குநர். நிக்கல் மற்றும் பல்லாடியம் ஆகிய உலோகங்களை சுரங்கம் தோண்டி எடுத்துவரும் நிறுவனம் நோர்நிக்கல் (Nornickel). இந்த விபத்திற்குக் காரணமும் அந்நிறுவனமே. இந்த நிறுவனத்தால் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்கெனவே சிலமுறை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

`உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு; 20,000 டன் எண்ணெய்; சிவப்பு நிறமான ஆறு!’- ரஷ்யாவில் அவசர நிலை

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய விசாரணை அமைப்பினர், அந்தச் சுரங்க நிறுவனத்தின் ஒரு பிரிவின் தலைவரான Vyacheslav starostin-ஐக் கைது செய்திருக்கிறார்கள். அவர் ஜூலை 31 வரை போலீஸ் கஸ்டடியில் இருப்பார் என்றும், வழக்கு எதுவும் அவர்மீது பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆலையின் எரிகலன் சேமிப்புக் கிடங்கில் இருந்த 20 ஆயிரம் டன் எண்ணெய் அம்பார்னியா நதியில் கலந்துள்ளது. இதனால் 7.5 மைல் நீளத்துக்கு அந்த நதி அடர் சிவப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இந்த ஆறு பியாசினோ ஏரி மற்றும் ஆர்டிக் கடலுக்குச் செல்லும் மற்றொரு ஏரிக்கும் செல்கிறது. நோர்நிக்கல் நிறுவனத்தின் துணைத் தலைவர் Sergey Dyachenko, சேமிப்புக் கிடங்கின் பில்லர்கள் இருந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறுகிறார்.

ரஷ்ய விபத்து
ரஷ்ய விபத்து

1994 இல் நடந்த எண்ணெய்க் கலப்பு விபத்திற்குப் பிறகு இந்த விபத்தே மிகப் பெரிய எண்ணெய்க் கலப்பு விபத்தாகும். ரஷ்ய அதிபர் புதின் இந்த விபத்து நடந்து இரண்டு நாள்கள் கழித்தே வெளியில் தெரிய வந்ததைக் கண்டித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

``இதைக் கண்டுபிடிக்க ஏன் இரண்டு நாள்களானது?. இவ்வாறான அவசர நிலைகளை, சமூக வலைதளங்கள் மூலம்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா?" என்று காட்டமாகக் கூறியுள்ளார். ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணி மூலம் தற்போது வரை 340 டன் எண்ணை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றைச் சுத்தப்படுத்த 1.5 மில்லியன் டாலர் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆறு முழுவதுமாகச் சுத்தமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு