Published:Updated:

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் அதிபர் மாளிகைமீது தாக்குதல்; தொடரும் பதற்றம்..!

ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
News
ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ( ட்விட்டர் )

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தினர்.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் அதிபர் மாளிகைமீது தாக்குதல்; தொடரும் பதற்றம்..!

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தினர்.

Published:Updated:
ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா
News
ஜெய்ர் போல்சனாரோ - லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ( ட்விட்டர் )

பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) வெற்றிபெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஜெய்ர் போல்சனாரோ தன்னுடைய ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

பிரேஸில் வன்முறை
பிரேஸில் வன்முறை
ட்விட்டர்

இதற்கிடையில், பிரேசில் நாடாளுமன்றத்துக்குள் ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் நேற்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் முன் திரண்ட ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிவருகின்றனர். இதையடுத்து, போலீஸார் போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நடந்துவரும் வன்முறையைக் கண்டித்த முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, " இந்த வன்முறை செயலைத் தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர். இது ஆதாரமற்றவை" எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரேஸில் வன்முறை
பிரேஸில் வன்முறை
ட்விட்டர்

பிரேசிலில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பிரேசில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். ஜனநாயக நிகழ்வுகளுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. மக்களின் விருப்பத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.