Published:Updated:

சீனாவுடன் போரிடத் தயாராகும் தைவான்... அமெரிக்கத் தலையீட்டை எச்சரிக்கும் பீஜிங்! - என்ன நடக்கிறது?

தைவான் - சீனா

சீனாவுடனான போருக்குத் தயாராக இருக்கும் விதமாக தைவான் ராணுவம், தனது வான் படைகளைத் திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவுடன் போரிடத் தயாராகும் தைவான்... அமெரிக்கத் தலையீட்டை எச்சரிக்கும் பீஜிங்! - என்ன நடக்கிறது?

சீனாவுடனான போருக்குத் தயாராக இருக்கும் விதமாக தைவான் ராணுவம், தனது வான் படைகளைத் திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தைவான் - சீனா

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தொலைபேசி அழைப்பின்போது, தைவானுடனான பீஜிங்கின் பரிவர்த்தனைகளில் தலையிடுவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் உட்பட நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங்
Lintao Zhang

தைவான் தற்போது, சீனாவுடன் போரை எதிர்கொள்ளும் சூழலில் தனது ஆயுதப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், அதன் காரணமாக சில அதிகாரிகள் மற்றும் வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தைவான் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, சீனாவின் உடனடிப் போருக்குத் தயாராக இருக்கும்விதமாக தைவான் ராணுவம், தனது வான் படைகளைத் திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி இன்றிரவு தைவானை வந்தடைவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, தன்னுடைய ஆசியப் பயணத்தில் தைவானுக்குச் சென்றால் அமெரிக்கா அதற்குத் தக்க விலையைக் கொடுக்கும் எனச் சீனா இன்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ``தைவானுக்குச் செல்ல நான்சி பெலோசிக்கு உரிமை உண்டு" என நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.