Published:Updated:

5 போர்க்கப்பல்கள், 17 விமானங்கள்; அச்சுறுத்தும் சீனா... அசராத தைவான்!

போர் விமானங்கள் ( மாதிரிப் படம் )

சீனாவின் போர் விமானங்கள் நுழைவுக்கு, பதிலடி தந்திருப்பதாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

5 போர்க்கப்பல்கள், 17 விமானங்கள்; அச்சுறுத்தும் சீனா... அசராத தைவான்!

சீனாவின் போர் விமானங்கள் நுழைவுக்கு, பதிலடி தந்திருப்பதாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
போர் விமானங்கள் ( மாதிரிப் படம் )

சீனாவிடமிருந்து பிரிந்து அதிகாரபூர்வமான தனி நாடாக தைவான் செயல்பட்டு வந்தாலும்கூட, சீனாவின் செயல்கள் அனைத்தும் இன்னும் தைவானைச் சொந்தம் கொண்டாடி வருவதாகவே தெரிகிறது. இதற்கிடையில் அமெரிக்காவுடன், தைவான் நெருக்கம் காண்பிப்பது சீனாவை இன்னும் கோபத்துக்குள்ளாகியிருக்கிறது. அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகை சபாநாயகர் நான்சி, தைவானுக்கு வந்து சென்றது சீனாவை அதிக அளவில் எரிச்சலூட்டியது.

தைவான் - சீனா
தைவான் - சீனா

இதன் காரணமாக சீனா, தைவானைச் சுற்றியிருக்கும் கடற்பகுதியில் தொடர்ந்து போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு அந்த நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதேபோக்கு நீடித்தால் ரஷ்யா-உக்ரைன் போரைப் போல் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே போர் மூள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனாவின் போர் விமானங்கள் நுழைவுக்கு, பதிலடி தந்திருப்பதாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

சீனா - தைவான்
சீனா - தைவான்

இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``சீன ராணுவத்தின் 5 போர்க்கப்பல்கள் மற்றும் 17 விமானங்கள் நம் எல்லைப் பகுதியில் காணப்பட்டன. அதையடுத்து, சீன ராணுவத்தின் இத்தகைய நிலைமையைக் கண்காணித்த நம் கட்டுப்பாட்டு விமான ரோந்து படை, கடற்படைக் கப்பல்கள் மற்றும் நில ஏவுகணை அமைப்புகள் மூலம் அவர்கள் பயிற்சிக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது" என்று தகவல் தெரிவித்திருக்கிறது.