Published:Updated:

உளவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டு... தாலிபன்களின் பிடியில் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்?!

ஆப்கானிஸ்தான் தாலிபன்

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஐவோர் ஷியரர், ஆப்கானிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் ஃபைசுல்லா ஃபைஸ்பக்‌ஷ் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் இருந்துகொண்டு உளவு பார்த்ததாகச் சொல்லி கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உளவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டு... தாலிபன்களின் பிடியில் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்?!

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஐவோர் ஷியரர், ஆப்கானிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் ஃபைசுல்லா ஃபைஸ்பக்‌ஷ் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் இருந்துகொண்டு உளவு பார்த்ததாகச் சொல்லி கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Published:Updated:
ஆப்கானிஸ்தான் தாலிபன்

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியது தாலிபன் படை. அதைத் தொடர்ந்து அமெரிக்கா - ஆப்கானிஸ்தானுக்கிடையில் பனிப்போர் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஏஜென்சி டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஐவோர் ஷியரர், ஆப்கானிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் ஃபைசுல்லா ஃபைஸ்பக்‌ஷ் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் இருந்துகொண்டு உளவு பார்த்ததாகக் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ), ``ஆகஸ்ட் 17 அன்று ஷியரரும், ஃபைஸ்பக்‌ஷும் காபூலில் உள்ள `ஜில்லா 10'-ன் ஷெர்பூர் சுற்றுப்புறத்தில் ஆவணப்பதிவு செய்துகொண்டிருந்தனர்.

தாலிபன்
தாலிபன்

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு அமெரிக்க டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தளபதி அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு தயாரிப்பாளர்களையும் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வேலை செய்வதற்கான பணி அனுமதிச்சீட்டு கேட்கப்பட்டது. மேலும், அவர்களது பாஸ்போர்ட், அடையாள அட்டை, செல்போன் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன.

கைது
கைது
ட்விட்டர்

தாலிபன் காவலர்கள் அவரை அமெரிக்க உளவாளி என்று தொடர்ந்து குறிப்பிட்டுவருவதாக அமெரிக்கக் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, ஷியரரும், ஃபைஸ்பக்‌ஷும் கைதுசெய்யப்பட்டனர்" எனத் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஐவோர் ஷியரர், கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த ஆவணப்படத்தை பதிவுசெய்துகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.