Published:Updated:

``தாலிபன் தலைமைக்கு பெண்களின் உரிமைகள் மீது நம்பிக்கை இல்லை” - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

தாலிபன்கள்

`பெண்களின் உரிமைகள் குறித்து தாலிபன் தலைமைக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை' என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

``தாலிபன் தலைமைக்கு பெண்களின் உரிமைகள் மீது நம்பிக்கை இல்லை” - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

`பெண்களின் உரிமைகள் குறித்து தாலிபன் தலைமைக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை' என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது. பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கல் நிறுத்தம் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களின் மீது திணித்து வருகிறது தாலிபன் அரசு.

ஆப்கானிஸ்தான் பெண்கள்
ஆப்கானிஸ்தான் பெண்கள்
ட்விட்டர்

இந்த நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் உரிமைகள் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் மூத்த ஆய்வாளருமான ஹீதர் பார் என்பவர், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் அட்டூழியங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "தாலிபன் தலைமைக்கு பெண்களின் உரிமைகளின் மீது சிறிதளவும் நம்பகத்தன்மை இல்லை. அதிகாரத்தை கைப்பற்றும் போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மரியாதை குறித்து அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். தற்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் பெண்கள் மீது புதிய புதிய அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். அது காலப்போக்கில் தீவிரமடைந்துள்ளது'' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!