Published:Updated:

ஆப்கானிஸ்தான்: `உங்கள் வீட்டு ஆண்களின் வேலை பறிபோகும்’ - ஹிஜாப் அணியாத பெண்களுக்கு தாலிபன் மிரட்டல்

ஹிஜாப்

ஹிஜாப் அணியாத இஸ்லாமியப் பெண்கள் 'மிருகங்களைப்போல தோற்றமளிப்பதாக' தாலிபன்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்: `உங்கள் வீட்டு ஆண்களின் வேலை பறிபோகும்’ - ஹிஜாப் அணியாத பெண்களுக்கு தாலிபன் மிரட்டல்

ஹிஜாப் அணியாத இஸ்லாமியப் பெண்கள் 'மிருகங்களைப்போல தோற்றமளிப்பதாக' தாலிபன்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Published:Updated:
ஹிஜாப்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். பெண்கள் டி.வி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்துகொள்ள வேண்டும். ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஆட்சிக்கு வந்த கையோடு தாலிபன்கள் விதித்திருந்தனர்.

 தாலிபன்கள்
தாலிபன்கள்

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகர் முழுதும், தாலிபன்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், 'ஹிஜாபை, பெண்கள் வெளியில் செல்லும்போது கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும். அப்படி அணிந்து செல்லாத பெண்கள், மிருகங்களைப்போல தோற்றமளிக்க முயல்கின்றனர் என்று அர்த்தம்'' என்பது மாதிரியான வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வரும் பெண்களுக்காகவே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத பெண்களின் வீட்டிலுள்ள ஆண்கள், அரசு வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism