Published:Updated:

பாகிஸ்தான்: இம்ரான் கானை கொலைசெய்யத் தீவிரவாதிகள் திட்டம்? - பயங்கரவாத தடுப்பு துறை எச்சரிக்கை!

இம்ரான் கான்

இம்ரான் கானை கொலைசெய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் பதவியேற்றார். இருப்பினும், பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசடைமடைந்து கொண்டே வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
Anjum Naveed

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னைக் கொலைசெய்ய சதி நடப்பதாக அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், இம்ரானின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, அவரைக் கொலைசெய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த நாட்டின் பயங்கரவாத தடுப்பு துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாகிஸ்தான் தேசியக்கொடி
பாகிஸ்தான் தேசியக்கொடி

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு, ``இம்ரான் கானை கொலைசெய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கொலைசெய்யும் நபரின் உதவியை நாடியிருக்கின்றனர். இம்ரான் கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்திருக்கிறது.

இந்த தகவல் உருது மொழி செய்தித்தாள் ஜாங்கில் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism