Published:Updated:

இலங்கை தமிழர்கள் பிரச்னை... அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்வு காண இலங்கை பிரதமர் உறுதி!

ரணில் விக்ரமசிங்க

இலங்கை தமிழர்களால் 'சுயாட்சி அதிகாரம்' கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் பிரச்னை... அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்வு காண இலங்கை பிரதமர் உறுதி!

இலங்கை தமிழர்களால் 'சுயாட்சி அதிகாரம்' கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தத்தளிக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய திட்டங்களைத் தீட்டிவருகிறார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளை முடித்த பின்பு, சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்குவது தொடர்பாக தீர்வு காணப்படும் . இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு அவையில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராகப் பல அநீதிகள் நடந்தன. அதைச் சரிசெய்ய தற்போது புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.  இலங்கையின் விடுதலை தொடங்கி, தமிழர்களுக்கான சுயாட்சி கோரிக்கை  வைக்கப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 75-வது சுதந்திரத்தைக் கொண்டாடவிருக்கிறது இலங்கை. அதற்குள் பல ஆண்டுகள் கோரிக்கையாக இருக்கும்  ‘தமிழர் சுயாட்சி அதிகாரம்’ தொடர்பான பிரச்னைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்வு எட்டப்படும் எனக் கூறியிருக்கிறார் பிரதமர்.

இலங்கைத் தமிழர்கள்
இலங்கைத் தமிழர்கள்

 1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்தது. அப்போது ஒலிக்கத் தொடங்கியது  சிறுபான்மை தமிழர்களுக்கான சுயாட்சி உரிமைக் குரல். ஆனால் அது வழங்கப்படாமலேயே இருந்தது. 1970-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த உரிமைப் போராட்டம் ஆயுதம் ஏந்தும் போராகவே மாறியது. பின்பு 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் 13- வது திருத்தச் சட்டப்படி  சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும். ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை முற்றிலும் நீக்க, கடந்த ஆண்டு இலங்கை அரசு முயன்றது. அதற்கு  தமிழீழப் போராளிகள், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

 இந்தத் திருத்தச் சட்டம் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், அதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தமிழர்களுக்கு எதிரான  சூழலை உருவாக்கியிருப்பதாக சில ஈழத் தலைவர்கள் கூறுவதும் உண்டு.

இலங்கையில் 15% மக்கள்தொகைகொண்ட தமிழர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்குவது மிக முக்கியம். குறிப்பாக, தமிழர்கள்-சிங்களவர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய முடியும். அதற்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டம் வழிவகுக்கும் என்பதே அனைவரது நம்பிக்கை!