Published:Updated:

ட்ரம்ப் நண்பன், ஹிலாரி எதிரி... ரஷ்யா போட்ட கணக்கும், அமெரிக்கத் தேர்தலும்! | ட்ரம்ப் தொடர் - 6

Trump
News
Trump ( Matt York )

பல கட்டங்களுக்குப் பிறகு நடந்த முல்லர் அறிக்கையிலும், ரஷ்யாவின் 'Internet Research Agency' தேர்தலில் தலையிட்டதாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2016ம் ஆண்டில் ட்ரம்ப்பை ஆதரித்தும் ஹிலாரியை எதிர்த்தும் பிரசாரம் செய்வதாக இருந்த ஆவணத்தை வெளியிட்டது.

தேர்தல் பிரசாரத்திலேயே ரஷ்யாவின் இடையீடு பற்றி அறிந்திருந்தாலும், அது ஜனநாயக கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என ஒபாமா நினைத்திருக்க மாட்டார். எல்லாம் சரியாக இருந்தும் ஹிலாரி தோற்றதில் முதல் பழி அதிபர் ஒபாமாவையே சாரும். பதவிக்காலம் முடிவதற்குள் ரஷ்யத் தலையீட்டை அம்பலப்படுத்தும் வேலைகளை ஒபாமா செய்துமுடிக்கவில்லை.

ஹிலாரி வெர்சஸ் புதின்!

ஹிலாரி - புதின் உறவு மற்றொரு அமெரிக்க ரஷ்ய பனிப்போர் எனலாம். 2010 காலகட்டத்தில் ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. அதிபர் புதின் ஆட்சி மீது நாடு முழுவதும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது. தனது செல்வாக்கை இழந்தார் புதின். 2011-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிச்சயம் புதின் தோல்வியடைவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், புதின் வென்றார். 'ஓட்டுப்பெட்டிகளில் ஏற்கனவே வாக்குச் சீட்டை நிரப்பி முறைகேடாக வென்றுவிட்டதாக' ஹிலாரி குற்றம் சுமத்தினார். தம்மை அவமதிப்பதாக கடிந்துகொண்டார் புதின்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Vladimir Putin
Vladimir Putin

2012-ம் ஆண்டு அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் 'Magnitsky Act' என்ற சட்டம் இயற்றப்பட்டது. Sergei Magnitsky என்ற ரஷ்யாவின் வரி கணக்காளர் அரசின் வரித்துறைகளில் நடக்கும் குற்றங்களை வெளிக்கொணர முயன்றார். ஆனால், அவர் முறைகேடு குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே இறந்தும் போனார். சரியாக மருத்துவம் எடுத்துக்கொள்ளவில்லை என அரசு கூறியது. ஆனால், அரசப்படுகொலை செய்யப்பட்டார் என உலகளவில் குற்றம்சாட்டப்பட்டது. Magnitsky-யின் நண்பர், ரஷ்யாவுடன் வர்த்தக உறவிலிருந்த அமெரிக்கத் தொழிலதிபர் பில் பிரவுடர் (Bill Browder) பிரச்னையை அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். புதினை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அமெரிக்கா நுழைய மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உறவை வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் சட்டத்தை இயற்றியது அமெரிக்கா. இது முறையல்ல என்றும், இதற்கெல்லாம் காரணம் அமெரிக்க அரசின் வெளியுறுவுத்துறை செயலாளர் ஹிலாரிதான் காரணம் என்றும் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றார் புதின்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொடர்ந்து மனசாட்சி இல்லாத மனிதர், ரஷ்யாவின் ஹிட்லர் என்று கடுமையாக புதினை தாக்கினார் ஹிலாரி. ரஷ்யா மீது ஒபாமா விதித்த பொருளாதாரத் தடைக்கு ஹிலாரியின் தலையீடுதான் காரணம் எனவும் நம்பினார் புதின். ஜனநாயக கட்சி ஹிலாரியை அதிபராக அறிவித்தது புதினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஹிலாரி அதிபரானால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் செல்வாக்கிலும் தாம் நிச்சயம் அடக்கப்படுவோம் என நினைத்தார். ஹிலாரி அதிபராகக் கூடாது என்பதில் ட்ரம்ப்பை விட புதின் உறுதியாக இருந்தார்.

Hillary clinton
Hillary clinton
Andrew Harnik

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா!

ட்ரம்ப்பின் வெற்றியில் முதன்மை பங்கு சமூக வலைத்தளங்களுடையது. ஒரு தனிநபரின் சாதாரண பதிவோ அல்லது பதிவிற்கான பார்வையோ என்ன செய்துவிடும் என்று நினைத்த வேளையில், அனைத்தையும் புரட்டிப்போட்டது சென்ற அமெரிக்கத் தேர்தல். சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஆதரித்துப் பேசுகிறார்கள் என்றால் அது தனிநபர் மட்டுமல்ல, அதன் பின் பல நிறுவன அமைப்புகள் உள்ளன. அந்நிறுவனங்களின் கரம் அயல்நாடு வரை நீள்கிறது என்று டிஜிட்டல் பிரசாரத்திற்குப் பின் உள்ள சதிகள் அம்பலமாகத் தொடங்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணம், வெளிநாட்டு அதிகாரம், மறைமுக பேச்சுவார்த்தை போன்ற முறைகளை கடைப்பிடித்தாலும் இணையத் தாக்குதலே (Cyber Attack) ரஷ்யாவின் முதன்மை குறிக்கோள். செயின்ட் பீட்டஸ்பர்கை சேர்ந்த 'Internet Research Agency' என்ற நிறுவனம், அமெரிக்கத் தேர்தலுக்காக ஆயிரக்கணக்கான சமூக வலைத்தள பக்கங்களை உருவாக்கியது. இதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல மில்லியன் பயனாளர்களைச் சென்றடைந்தது. ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளை வெளியிட்ட டிசி லீக்ஸ், விக்கி லீக்ஸ், Guccifer 2.O போன்ற நிறுவனங்களுக்கு ஆவணங்களை ரகசியமாகத் திருட 'Russia Military Intelligence Service (GRU)' உதவியதாகச் சர்ச்சையானது. ஒபாமா, புதின் மீது கடுங்கோபமானார். ரஷ்யா மீதான தடைகளை நீட்டித்தார்.

Trump
Trump
Alex Brandon / AP

மற்றொரு நாட்டின் விவகாரத்தில் ராணுவ புலனாய்வு நிறுவனம் தலையிடுவது அந்நாட்டு அதிபரின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமில்லை. புதின்தான் ஹிலாரிக்கு எதிரான ஆவணங்களைத் திருடச் சொல்லியிருப்பார், ஹிலாரி தோற்பதுதான் புதினின் குறிக்கோள் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட், ஒபாமாவின் வெளியுறவு ஆலோசகர் பென் ரோட்ஸ் போன்றோர் கணித்தார்கள். எஃப்பிஐ, சிஐஏ போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய புலனாய்வு இயக்குநரகமும் இதையே (ஜனவரி 2017) கூறியது.

ட்ரம்ப்பை வளர்ச்சியின் நாயகனாகக் காட்ட வேண்டும், ட்ரம்ப்பே வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகச் சித்திரிக்க வேண்டும். ஒருவேளை ஹிலாரி வென்றால், முறைகேடாக வென்றுவிட்டார்கள், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது போன்ற மனநிலையை உருவாக்க வேண்டும் என்று 'Russian Institute for Strategic Studies' திட்டம் தீட்டியதாக, திட்டத்திலிருந்த பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி (ஏப்ரல் 2017) வெளியிட்டன.

பல கட்டங்களுக்குப் பிறகு நடந்த முல்லர் அறிக்கையிலும், ரஷ்யாவின் 'Internet Research Agency' தேர்தலில் தலையிட்டதாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2016ம் ஆண்டில் ட்ரம்ப்பை ஆதரித்தும் ஹிலாரியை எதிர்த்தும் பிரசாரம் செய்வதாக இருந்த ஆவணத்தை வெளியிட்டது.

ட்ரம்ப்பும் புதினும்!

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

ஒரு தொழிலதிபராக ரஷ்யாவுடன் நீண்டகால உறவிலிருந்தவர் ட்ரம்ப். குறிப்பாக, 2010-க்குப் பிறகு முதலீடுகளைக் குவிப்பது, டிவி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது, ட்ரம்ப் டவரின் கிளைகளை நிறுவுவது என ரஷ்ய நிலத்தில் நெருக்கம் காட்டினார். இடையிடையே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதிபர் புதினை புகழ்ந்து தள்ளினார். இது வெறும் வியாபாரத்திற்கானது அல்ல என்ற உண்மை வெளியாகத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு ஐரோப்பியப் புலனாய்வு நிறுவனம், ட்ரம்ப்பிற்கு நெருக்கமானவர்கள் ரஷ்யாவின் முக்கிய புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் குறிப்பிட்டது. அமெரிக்க அரசியல் ஆலோசகர் பால் மானபோர்ட் (Paul Manafort) ரஷ்ய அதிகாரிகளிடம் தொடர்பிலிருந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. பால் மானபோர்ட ட்ரம்ப்புடன் வர்த்தக தொடர்பிலிருந்தவர். தேர்தலுக்கு முந்தைய சில வருடங்களில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அடிக்கடி சந்தித்தார். ஜூன் 2016-ல் ட்ரம்ப்பின் ஆலோசகர்களும் சில ரஷ்ய அதிகாரிகளும் ட்ரம்ப் டவரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர் மானபோர்ட். ரஷ்யா இடையீடு குறித்த விசாரணைகளில் முக்கிய குற்றவாளிகளின் பட்டியலிலிருந்தார் மானபோர்ட் .

ட்ரம்ப்பிற்கு நெருக்கமான தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ரோஜர் ஸ்டோன் (Roger Stone) தேர்தலின் போது விக்கிலீக்ஸுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். விக்கிலீக்ஸ் நிறுவனமும் தொடர்ந்து ஜனநாயக கட்சி ஆவணங்களைத் திருடி வெளியிட்டு வந்த வேளையில் குடியரசு கட்சிக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. பின்னாளில், 'ஜனநாயக கட்சியால் ஆவணங்களைப் பாதுகாக்க முடியவில்லை' என ஜூலியன் அசாஞ்சேவிற்கு ஆதரவுக்குரல் கொடுத்தார் ட்ரம்ப். ஒவ்வொரு முறை புதினுக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழும்போதெல்லாம் புதினை ஆதரிப்பதே ட்ரம்ப்பின் வழக்கமாக இருந்தது.

Wikileaks
Wikileaks

பல கட்ட விசாரணைகளில் ஆவணங்கள் வெளியான போதும், அப்படி ரஷ்யாவிலிருந்து தலையீடு இருந்தாலும், ரஷ்ய அரசு அதற்குத் துணை புரிந்திருக்காது, நிச்சயம் புதின் செய்திருக்க மாட்டார் என்று புதினுக்கு எதிராகச் சிறு துரும்பைக்கூட அசைக்க விரும்பவில்லை ட்ரம்ப். பதவியேற்றவுடன் ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை நீக்கியது முதல் ரஷ்யாவிற்காக சிரியாவிலிருந்த அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றார் என்பது வரை புதினுக்காக இணங்கினார் ட்ரம்ப். தனது எதிராளிகளையெல்லாம் ஒடுக்குகிறார் எனப் பலரும் புதினை கொலைகாரன் என்றபோது, அப்படியெல்லாம் இல்லை அவர் உத்தமர் என்றவர் ட்ரம்ப். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த ரஷ்யா 1979-ல் ஆப்கனில் ஊடுருவிட்டது என அமெரிக்க ராணுவம் ஆப்கன் போரில் இறங்கியதோ, அந்த ரஷ்யாவின் செயல் அன்று சரியே என்று சான்றிதழ் அளித்தார்.

2016 தேர்தலில் ட்ரம்ப்பே வெற்றி பெற விரும்பியதாகக் கடந்த ஆண்டு புதின் கூறினார். ட்ரம்ப் பதவியேற்பதற்குள் ஒபாமாவால் முழு விசாரணையையும் முடிக்க முடியவில்லை. பிறகும், விசாரணை பல கட்டங்களில் நீண்டது. ஆனால், 45வது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுவிட்டார்.