Published:Updated:

``அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்!''- முஷாரப் வழக்கின் நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

முஷாரப்-க்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்-க்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

``அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்!''- முஷாரப் வழக்கின் நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்-க்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
முஷாரப்-க்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம்

பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும் அந்த நாட்டு ராணுவம்தான் மறைமுகமாக ஆட்சியை நடத்தும் என்று சொல்வார்கள். தற்போதைய பிரதமர் இம்ரான்கான் மீதும் ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இம்ரான்கான் எடுக்கும் முடிவுகள், பெரும்பாலும் ராணுவத்துக்கு சாதகமாகவே அமைந்திருக்கும். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஓமர் ஜாவேத் பாஜ்வாவுக்கு பாகிஸ்தான் அரசு மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளித்ததை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கடந்த 1999-ம் ஆண்டு, ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தவர், முஷாரப்.

இஸ்லாமபாத்தில் உள்ள டி சதுக்கம் இதுதான்
இஸ்லாமபாத்தில் உள்ள டி சதுக்கம் இதுதான்

கடந்த 2007-ம் ஆண்டு, தானே பாகிஸ்தான் நாட்டின் அதிபராகத் தொடரும் வகையில், முஷாரப் 1973-ம் ஆண்டின் பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தை முடக்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 61 நீதிபதிகளை சிறைக்குள் தள்ளினார். இந்த எமர்ஜென்ஸியால், பாகிஸ்தான் நீதித்துறை மிகவும் கொதிப்படைந்தது. இதனால், பர்வேஷ் முஷாரப் பதவி விலகியதும் முதன்முதலில் எமர்ஜென்ஸிக்கு விளக்கம் கேட்டு அவருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு, நவாஸ் ஷெரிஃப் ஆட்சிக் காலத்தில், முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் மூன்று நீதிபதிகள் இருந்தனர். அமர்வின் தலைமை நீதிபதியும் பெஷாவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான வாக்கர் அகமது ஷேத் அளித்துள்ள தீர்ப்புதான் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 169 பக்கங்கள்கொண்ட தீர்ப்பில் ஷேத் , 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும். தண்டனையை நிறைவேற்றும் துறையினர், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னதாக, முஷாரப் இறந்துவிட்டால், அவரின் உடலை இஸ்லாமாபாத் நாடாளுமன்றம் அருகேயுள்ள டி- சதுக்கத்தில் தொங்கவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

மருத்துவமனையில் முஷாரப்
மருத்துவமனையில் முஷாரப்

மற்றொரு நீதிபதியான கரீம், ''என்னுடையை தலைமை நீதிபதி அளிக்கும் இதுபோன்ற தீர்ப்புக்கு என்னால் உடன்பட முடியவில்லை. முஷாரப் கடுமையான குற்றங்களை இழைத்திருக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறேன்'' என்று தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார். மற்றொரு நீதிபதியான அக்பர், இவர்கள் இருவரின் தீர்ப்புக்கும் மாறான தீர்ப்பைக் கூறியுள்ளார். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி, முஷாரப்-க்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகிஸ்தானில், இதற்கு முன் ஒரே ஒரு முறை, இத்தகையை கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர் கொலைகளைச் செய்த ஒருவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்னிலையில் தூக்கிலிட்டு, பின்னர் அவரின் உடலை 100 துண்டுகளாக வெட்டி வீசிவிட வேண்டுமென்று அந்தத் தீர்ப்பு சொன்னது. ஆனால், அந்தத் தீர்ப்புகூட நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது, முஷாரப்-க்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு காரணமாக பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஷிப் கசூர் மீடியாக்களிடம் பேசுகையில், ''பாகிஸ்தான் ராணுவம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல குடும்பம் போன்றது. எங்களுக்கு நாட்டையும் பாதுகாக்கத் தெரியும். எங்களையும் பாதுகாத்துக்கொள்ளத் தெரியும். ராணுவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் எத்தகைய செயலையும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். இத்தகைய தண்டனை அளிப்பது மனிதத்தன்மைகொண்டதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

முஷாரஃப்-க்கு கடும் தண்டனை விதித்த நீதிபதி ஷேத்
முஷாரஃப்-க்கு கடும் தண்டனை விதித்த நீதிபதி ஷேத்

இதற்கிடையே, 'இத்தகைய தீர்ப்பை எழுதியவர், நீதிபதியாக இருக்கத் தகுதியற்றவர். மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்' என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இது போன்ற தீர்ப்பு அராஜகமானது. நாட்டில் பல எதிர்வினைகளை ஏற்படுத்தும் தீர்ப்பு இது. தீர்ப்பு எழுதிய நீதிபதியைப் பணியில் இருந்து விடுவிக்க தலைமை சட்ட கவுன்சிலுக்கு அறிவுறுத்தியுள்ளோம்'' என்று இம்ரான்கான் கூறியுள்ளார். இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்பிரமணிய சுவாமி, ''பர்வேஷ் முஷாரஃப் டெல்லியில் பிறந்தவர். அவரை, பாகிஸ்தான் துன்புறுத்துகிறது. எனவே, அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism