Published:Updated:

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியர்களின் வெற்றி - ஒரு பார்வை

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்தியர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியர்களின் வெற்றி - ஒரு பார்வை

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்தியர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

Published:Updated:
அமெரிக்கா - இந்தியா

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சிலரும் வெற்றிபெற்றிருக்கின்றனர். இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமி பெரோ, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ தனேதர், ரோகித் கன்னா, பிரமீளா ஜெயபால் ஆகிய ஐந்து இந்தியர்கள் குடியரசுக் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளனர்.

பிரமிளா ஜெயபால்
பிரமிளா ஜெயபால்
ட்விட்டர்

பிரமிளா ஜெயபால்

இவர் சென்னையில் பிறந்தவர். தற்போது, வாஷிங்டன் மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கிளிப் மூனை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார். பிரதிநிதிகள் அவையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்டு பெறும் நான்காவது வெற்றி இது.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

 ஸ்ரீ தனேதர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்தவர், 1970-களில் அமெரிக்காவுக்கு வந்தார். தொடக்கத்தில், காவலாளியாக இருந்து பல போராட்டங்களைக் கடந்து தொழில்முனைவோராக வாழ்வில் முன்னேறியவர். மெக்ஸிகன் மாகாணத்திலிருந்து முதன்முறையாக வென்ற இந்திய வம்சாவளி என்னும் முக்கியச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஸ்ரீ தனேதர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மெக்ஸிகன் கவர்னர் ஆகும் முயற்சியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

இந்திய தலைநகரான புது டெல்லியில் பிறந்தவர். தொடர்ந்து, இலினாய்ஸ் மாகாணத்தில் ராஜா 4-வது முறையாக வெற்றிபெற்று எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2004–ம் ஆண்டு ஒபாமாவின் செனட் சபைக்கான தேர்தல் பிரசாரத்துக்கு இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், அதே ஆண்டு ஒபாமாவின் ஜனநாயக தேசிய மாநாட்டின்  உரையை உருவாக்க உதவியதில் முக்கியப் பங்காற்றியவர்.

ரோ கன்னா

பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்த  இவரின் தாத்தா, இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இவரின் தந்தை அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பொருளியல் படித்த கன்னாவை 2009-ம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவின் வர்த்தகத்துறையின் துணை உதவிச் செயலாளராக நியமித்தார். கன்னா சர்வதேச வர்த்தகப் பணிகளுக்குத் தலைமை தாங்கி, அமெரிக்காவின் ஏற்றுமதியை அதிகரிக்கப் பணியாற்றினார். தற்போது சிலிக்கான் வேலி மாகாணத்தில குடியரசு வேட்பாளரை எதிர்த்து வெற்றியை உறுதிசெய்திருக்கிறார். இது இவரின் 4-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ரோ கன்னா
ரோ கன்னா

அமி பேரா

`இந்திய-அமெரிக்கர்களின் காட்ஃபாதர்’ என்று அழைக்கப்படுகிறார் அமி. மற்ற அரசியல்வாதிகளைக் காட்டிலும் அமெரிக்க அரசியலில் அனுபவம் மிகுந்தவர். நீண்டகாலமாக காங்கிரஸ் உறுப்பினராக இருக்கும் முதல் இந்தியரும் இவரே. அதுமட்டுமல்லாமல், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆளுமை கொண்டவர் என்று மக்களால் பாராட்டப்பட்டவர். இது கலிஃபோர்னியாவில் அமி பேராவின் 6-வது வெற்றி என்பது கூடுதல் சிறப்பு.

அருணா மில்லர்

மேலும், கவர்னர் பதவிக்கான தேர்தல் 36 இடங்களுக்கு நடந்தது. இதில் இந்தியரான அருணா மில்லர் மேரிலேண்ட் மாகாணத்தின் துணை கவர்னர் பதவியைப் பிடித்திருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த இவர் தன் ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். இவர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். இவர் துணைநிலை ஆளுநராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார். இந்த மாகாணத்தில் கவர்னராக வெஸ் மூர் வெற்றிபெற அருணா மில்லர் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார். குறிப்பாக, அங்கிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகளை வெஸ் மூருக்குக் கிடைக்கச் செய்ததில் அருணா ஆற்றிய பணி முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் அருணா மில்லர் இந்த மாகாணத்தின் கவர்னராகும் வாய்ப்புகளும் உள்ளன. 2018-ம் ஆண்டு பிரதிநிதிகள் சபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தற்போது துணை கவர்னராக வெற்றிபெற்று கவனம் ஈர்த்திருக்கிறார் அருணா மில்லர்.

அருணா மில்லர்
அருணா மில்லர்
Julio Cortez

2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகள்படி அமெரிக்காவில் 45 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே, அங்கு இந்தியர்களின் பிரநிதித்துவம் அவசியமாகிறது. இது சிறுபான்மையினராக இருக்கும் இந்தியர்களுக்கு பலமே. அதேநேரம், பெரும்பான்மை அமெரிக்கர்களின் வெறுப்புணர்வை எதிர்கொள்ள இந்த அரசியல் அதிகாரம் தேவை. எனவே, இனி வரும் காலத்தில் இந்தியர்களின் அரசியல் வருகை மேலும் அதிகரிக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.