Published:Updated:

ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலை..! - இந்தியாவுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன?!

பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலை..! - இந்தியாவுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன?!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

Published:Updated:
பிரதமர் மோடி

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தன. அதன்மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்து, நடுநிலை வகித்தது இந்தியா. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தத் தீர்மானத்தை ரத்துசெய்தது.

புதின்
புதின்

பின்னர், அந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக ஐ.நா பொதுச்சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டது. அதற்காக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பையும் புறக்கணித்து, இந்தியா நடுநிலை வகித்தது. இந்தச் சூழலில், 193 உறுப்பினர்களைக்கொண்ட ஐ.நா சபையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், `சர்வதேசச் சட்டங்களுக்கு இந்தியா கட்டுப்பட்டு நடக்க வேண்டும், பேச்சுவார்த்தை உள்ளிட்ட அமைதி வழிகளில் பிரச்னைக்கு ரஷ்யா தீர்வுகாண வேண்டும்’ என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் மக்கள்
உக்ரைன் மக்கள்

வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய ஐ.நா சபைக்கான இந்தியத் தூதரான டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைனில் நிலைமை மோசமடைந்துவருவது குறித்து இந்தியா கவலைகொள்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சி மூலமாக பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும், உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்கிற இந்தியாவின் முடிவு, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

இது குறித்து பத்திரிகையாளர் சிவப்பிரியனிடம் பேசினோம். “இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்தியா நடுநிலை வகித்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதேநேரத்தில், இங்குள்ள புவிசார் அரசியல், இந்தியாவின் முடிவுக்கு மிக முக்கியமான காரணம். இந்தியா மட்டுமல்லாமல், பாகிஸ்தான், இலங்கை உட்பட தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளன. அந்தத் தீர்மானத்துக்கு எதிராக சீனா வாக்களித்தது.

சிவப்பிரியன்
சிவப்பிரியன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைத் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, சண்டையை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறும் கூறுகிறார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட முயற்சியாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது.

அது, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான நல்லுறவின் வெளிப்பாடு. அமெரிக்காவுடன் இந்தியா என்னதான் நெருக்கம் காட்டினாலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வலுவானது. அந்த உறவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா விரும்புகிறது. உலக அளவில் ரஷ்யாவைத் தனிப்படுத்த முயற்சி நடக்கும் நேரத்தில், ரஷ்யாவின் பக்கம் இந்தியா இருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

நடுநிலை வகிப்பது என்கிற இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவுடனான நட்புறவு தொடரலாம். அதேநேரத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சிறிய அளவில் சிக்கலை இது ஏற்படுத்தலாம்” என்கிறார் சிவப்பிரியன்

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணிப்பது இது புதிதல்ல. மேலும், பா.ஜ.க அரசு மட்டுமே இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று பார்க்க முடியாது. 2014-ம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அப்போது, உக்ரைனில் உள்ள கிரீமியாவை ரஷ்யா தனது ஆளுகைக்குள் கொண்டுவந்தது. அந்த நேரத்தில், அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசும், ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

உக்ரைன் மக்கள்
உக்ரைன் மக்கள்

உக்ரைன் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமாக, தனது பொருளாதார, பாதுகாப்பு நலன்களை சமரசம் செய்துகொள்வதற்கு இந்தியா விரும்பாது என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சீனா எடுக்கும் நிலைப்பாடும் முக்கியமானது. அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பதிப்பாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரியிடம் பேசினோம்.

“நடுநிலை வகிப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்ததால் இந்தியாவுக்கு பெரிய பாதகம் எதுவும் கிடையாது. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷ்யா இருந்துவருகிறது. பல நேரங்களில் ஐ.நா-வில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா வாக்களித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு ஆதரவாக ‘வீட்டோ’ அதிகாரத்தையும்கூட ரஷ்யா பயன்படுத்தியிருக்கிறது.

பத்ரி சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

ரஷ்யாவிடமிருந்து ஏராளமான யுத்த தளவாடங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து வாங்கவேண்டிய தேவை இருக்கிறது. இத்தகைய சூழலில், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது” என்கிறார் பத்ரி சேஷாத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism