Published:Updated:

கிரிமியா: ரஷ்ய விமானதளம்மீது உக்ரைன் தொடர் வெடிகுண்டு தாக்குதல்!

உக்ரைன் - ரஷ்யா

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமானதளத்தின் ஓடுபாதையில் உக்ரைன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கிரிமியா: ரஷ்ய விமானதளம்மீது உக்ரைன் தொடர் வெடிகுண்டு தாக்குதல்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமானதளத்தின் ஓடுபாதையில் உக்ரைன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கு மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமானதளத்தின் ஓடுபாதையில் உக்ரைன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யக் கருங்கடல் கடற்படையின், 43-வது சுதந்திர கடற்படை, விமானப் படைப்பிரிவு தளங்களின்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைன் படைப்பிரிவு, இது எதிர்பாராமல் நடந்த விபத்து எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால் ரஷ்யா தரப்பில், `இது உக்ரைனால் திட்டமிடப்பட்ட நிகழ்த்தப்பட்ட தாக்குதல்' எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்களின்படி, ரஷ்யாவின் சாகி விமானதளத்தில் Su-24 ரக குண்டுவீச்சு விமானங்கள், Su-30 ரக போர் விமானங்கள், Mi-8 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் வெடிமருந்து கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான போர் வாகனங்கள் சேதமடைந்துவிட்டதாகவும் ரஷ்யா தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.