Published:Updated:

உக்ரைன்-ரஷ்யா: ``உலகமே உங்களிடமிருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது"- துருக்கி

துருக்கி அதிபர் எர்டோகன்

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை குறித்து, "உலகமே உங்களிடமிருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது" எனப் பேசியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா: ``உலகமே உங்களிடமிருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது"- துருக்கி

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை குறித்து, "உலகமே உங்களிடமிருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது" எனப் பேசியுள்ளார்.

Published:Updated:
துருக்கி அதிபர் எர்டோகன்

உக்ரைனில் கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போர், ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. போர் தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை போரை நிறுத்தப்போவதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்தையாளர்கள் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக துருக்கி ஊடகங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

இது தொடர்பாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan), ``இரு தரப்பினருக்கும் நியாயமான கவலைகள் உள்ளன. இருப்பினும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் தீர்வை எட்டுவது என்பது சாத்தியமே. இந்தச் சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது இரு தரப்பினரின் கைகளில்தான் உள்ளது. மேலும், இந்த மோதலை நீட்டிப்பதில் யாருக்குமே விருப்பமில்லை. உலகமே உங்களிடமிருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism