Published:Updated:

உக்ரைன் அதிபர் தன் மனைவியுடன் `வோக்’ இதழுக்கு `வார் தீம்’ போட்டோஷூட்; வலுக்கும் கண்டனங்கள்!

ஜெலன்ஸ்கி, ஓலேனா புகைப்படங்கள் ( vogue magazine )

இந்த புகைப்படங்களில் ஓலேனா மெருகூட்டப்பட்ட தோற்றத்தோடு காட்சியளிக்கிறார். நாட்டு மக்களின் வலியையும், அதிர்ச்சியையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டிய புகைப்படத்தின் சாராம்சமே அதில் இல்லை.

உக்ரைன் அதிபர் தன் மனைவியுடன் `வோக்’ இதழுக்கு `வார் தீம்’ போட்டோஷூட்; வலுக்கும் கண்டனங்கள்!

இந்த புகைப்படங்களில் ஓலேனா மெருகூட்டப்பட்ட தோற்றத்தோடு காட்சியளிக்கிறார். நாட்டு மக்களின் வலியையும், அதிர்ச்சியையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டிய புகைப்படத்தின் சாராம்சமே அதில் இல்லை.

Published:Updated:
ஜெலன்ஸ்கி, ஓலேனா புகைப்படங்கள் ( vogue magazine )

சமீபத்தில் பலரையும் கதிகலங்க வைத்த ஒரு போர் என்றால் அது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஏற்பட்ட போர் தான். பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரில், பல உக்ரைன் மக்கள் இறந்தனர். தங்கள் உயிரை தற்காத்துக்கொள்ள பலரும் இடம் விட்டு இடம் சென்றனர்.

ஓலேனா ஜெலன்ஸ்கி
ஓலேனா ஜெலன்ஸ்கி
vogue magazine

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னமும் அங்கு போரின் துப்பாக்கி சத்தங்களும், வெடிபொருட்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் மக்கள் மத்தியில் நீங்காமல் ஒரு வடுவாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும், அவர் மனைவி ஓலேனா ஜெலன்ஸ்கியும் வோக் இதழுக்காக (Vogue) ‘வார் தீம்’ல் போட்டோஷூட் செய்யப்பட்டிருப்பது மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிபர் மாளிகையில் மார்பிள் படிக்கட்டுகளில் ஓலேனா உட்கார்ந்து நேர்க்கொண்ட பார்வையோடு இருக்கும் புகைப்படம், விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் கை கோர்த்திருப்பது போன்ற புகைப்படம், அன்டோனோவ் விமான நிலையத்தில் பெண் சிப்பாய்களுக்கு அருகில் நின்று தன்னுடைய நீல நிற பெரிய கோட்டை ஒரு கையில் பிடித்து இருப்பது போன்ற புகைப்படங்கள் `வீரத்தின் உருவம்’ (Portrait of Bravery) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஓலேனா ஜெலன்ஸ்கி
ஓலேனா ஜெலன்ஸ்கி
Vogue magazine

இந்த புகைப்படங்களில் ஓலேனா மெருகூட்டப்பட்ட தோற்றத்தோடு காட்சியளிக்கிறார். நாட்டு மக்களின் வலியையும், அதிர்ச்சியையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டிய புகைப்படத்தின் சாராம்சமே அதில் இல்லை. அந்த புகைப்படத்தில் இடம் பெற்றவர்களும் சிரிக்கவில்லை. இந்த புகைப்படத்தின் கீழுள்ள வரியில், ஜெலன்ஸ்கா உக்ரைன் வடிவமைப்பாளர்களால் டிசைன் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்துள்ளார் என குறிப்பிடப்பட்டு, அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ’பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் ஏதோ ஒன்றை விற்பனை செய்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது’ என மக்கள் சாடி வருகின்றனர்.

`உக்ரைனிய மக்கள் நரக கொடுமையை இங்கு அனுப்பவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிபரும் அவர் மனைவியும் `வோக்’ போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

`நாடு இருக்கும் நிலைமையில் நமக்கு இதெல்லாம் தேவையா குமாரு’ என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் குரல்கள் எழும்பியுள்ளன.