Published:Updated:

`இந்தப் பதிலை என்னிடம் ஏன் சொன்னீர்கள்?’ -பெண் செய்தியாளரின் கேள்வியால் பிரஸ்மீட்டை முடித்த ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

``லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. நன்றி” எனச் செய்தியாளர் சந்திப்பைப் பாதியிலே முடித்து விட்டு கிளம்பினார் ட்ரம்ப். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் வண்ணம் செய்திருக்கிறது. பல நாடுகள் கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டது. சமூக இடைவெளியுடன் மக்கள் வீட்டுக்கு வெளியே தங்களின் தேவைகளுக்காக வரத் தொடங்விட்டார்கள். அலுவலகங்கள், நிறுவனங்கள் பல கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு
AP

உலக அளவில் கொரோனாவால் அதிகம் அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு 14 லட்சத்தை நெருங்கிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரழப்பு சுமார் 80,000 -ஐ கடந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினமும் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதலே, ட்ரம்ப், சீனாவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சீனாவிலிருந்துதான் வைரஸ் பரவியதாகவும் இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அமெரிக்காவில் கொரோனா காலத்தில் அவரது பல விமர்சனங்கள் யோசனைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. கொரோனா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய உரைக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சிபிஎஸ் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், ``உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம். 80,000 பேர் கொரோனாவால் இந்த நாட்டில் பலியாகியுள்ளனர். இருந்தும் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கடுமையாக பதிலளித்த ட்ரம்ப், ``இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்... சீனாவிடம் சென்று கேளுங்கள்” என்றார். வெய்ஜியா ஜியாங், சீனாவில் பிறந்து தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

உடனடியாக ட்ரம்ப், சிஎன்என் ஊடகத்தின் பெண் செய்தியாளரான காலின்ஸிடம் கேள்வியைக் கேட்கச் சொன்னார். எனினும் ஜியாங் குறுக்கிட்டு, ``என்னிடம் ஏன் குறிப்பாக அந்தப் பதிலைச் சொல்கிறீர்கள்?” என்றார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``நான் யாரிடமும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, இதுபோன்ற மோசமான கேள்விகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு இதுதான் பதில்” என்றார்.

ஜியாங், ``இது ஒன்றும் மோசமான கேள்வி இல்லையே. உங்களுக்கு ஏன் அப்படி தோன்றுகிறது?” என்றார். எனினும் ட்ரம்ப் மற்றொரு செய்தியாளரைச் சுட்டிக்காட்டி, கேள்வியைக் கேட்கச் சொன்னார். அப்போது சிஎன்என் செய்தியாளர் காலின்ஸ், தன்னிடம் இரு கேள்விகள் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் ட்ரம்ப், அவருக்குப் பின்னால் இருந்த செய்தியாளரை அழைத்தார். அப்போது குறுக்கிட்ட காலின்ஸ், ``முன்னதாக நீங்கள் என்னைத்தான் குறிப்பிட்டீர்கள்.. என்னிடம் இரண்டு கேள்விகள் இருக்கின்றன” என்றார்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு
AP

``ஆமாம், நான் அழைத்தேன். ஆனால் நீங்கள் உங்கள் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டீர்கள்” என்றார் ட்ரம்ப். அதற்கு பதிலளித்த காலின்ஸ், ``என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் தனது கேள்விகளை முடிப்பதற்காக நான் காத்திருந்தேன். இப்போது உங்களிடம் கேள்வி கேட்கலாமா?” என்றார்.

`உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் பரவாயில்லை!’ - ஒபாமா விமர்சனத்துக்கு ட்ரம்ப் பதிலடி
ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

``லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. நன்றி” எனச் செய்தியாளர் சந்திப்பைப் பாதியிலே முடித்து விட்டு கிளம்பினார் ட்ரம்ப். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் முடிந்த உடனேயே ட்விட்டரில் ஜியாங் -க்கு ஆதரவான ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆனது. சிலர், ட்ரம்ப் இன வெறியுடன் நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பல ஊடகங்கள் ட்ரம்ப் -ன் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு