Published:Updated:

`அப்படி நடந்தால்... இதுவரை இல்லாத அளவு வருத்தப்படுவீர்கள்..!’ - இரானை எச்சரித்த ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

இரான், அவர்களுக்கு ஆதரவான படைகள் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் இராக்கின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இராக்கில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா, இரான் இடையேயான மோதல், உலகமே கொரோனா என்னும் பெருந்தொற்றை எதிர்த்து போரிடும் இந்த நேரத்த்தில்கூட குறையவில்லை. அமெரிக்கா - இரான் இடையேயான பதற்றம் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்
Alex Brandon

2018-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கியமான அணுசக்தி ஒப்பந்ததைக் கைவிட்டதுடன் இரான் மீது பொருளாதார தடை விதித்தார். தொடர்ந்து அமெரிக்கப் படையும் இராக்கில் குவிக்கப்பட்டது. அப்போது முதலே பதற்றமான சூழல் தொடர, கடந்த ஜனவரி மாதம் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

இதைத்தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் இரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகக் கருத்து தெரிவித்தார். ட்விட்டரில் ட்ரம்ப், `இரான், அவர்களுக்கு ஆதரவான படைகள் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் இராக்கின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அப்படி நடந்தால், இரான் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்” எனப் பதிவிட்டார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

பின்னர் கொரோனா தொடர்பாக மாலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவரிடம் இரானுக்கு எதிரான ட்வீட் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ட்ரம்ப், ``நாங்கள் அவர்களுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விரோதத்துடன் செயல்பட்டால், இதுவரை வருத்தபடாத அளவுக்கு அவர்கள் வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்” எனக் கடுமையாக எச்சரித்தார்.

இராக்கும் அமெரிக்காவும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், இரான் சில புரட்சி அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் தொடர்ந்து மோசமான திட்டங்களை நடத்த அந்தநாடு திட்டமிட்டு வருவதாகும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு