Published:Updated:

பிரிட்டன்:`விருந்தில் கலந்துகொண்டது தவறுதான்!’ - பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்
News
போரிஸ் ஜான்சன்

கொரோனா முதல் அலை ஊடரங்கு காலத்தில், விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு, மே மாதம் கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, பொதுமுடக்கம் அமலில் இருந்தது. லண்டன் டவுனிங் வீதியிலுள்ள தனது அலுவலகத் தோட்டத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாட்டை மீறி நடந்த விருந்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்டதாக, அவரின் முன்னாள் ஆலோசகர் அளித்த தகவல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியால் போரிஸ் ஜான்சன், அவரின் கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளார்.

பிரிட்டன்
பிரிட்டன்

இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், ``பிரதமர் மக்களுக்கு துரோகம் செய்து, பல மாதங்களாக இதை மூடிமறைத்து தன்னைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் இதனால் அவர்மீது கோபம் கொண்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும்' எனத் தெரிவித்தார். இது நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய போரிஸ் ஜான்சன், அது ஓர் அலுவலக வேலை நிகழ்வு என்று தான் நம்பிவிட்டதாகவும், அதனால்தான் அந்த விழாவில் தான் பங்கேற்றதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் இதற்குப் பொறுப்பேற்ற அவர், முதன்முதலாகத் தனது தவற்றை ஒப்புக்கொண்டு, அதற்காக மனதார பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சியினர், போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

இது தொடர்பாக போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர், ``நேற்று செய்தியாளர்களிடம், `20 மே, 2020 அன்று சமூக இடைவெளியுடன் பானம் அருந்த ஊழியர்களை அழைக்கும் மின்னஞ்சலைப் பிரதமர் பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் போரிஸ் ஜான்சனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.