Published:Updated:

`தானிய ஏற்றுமதியில் உக்ரைனுடன் ஒன்றிணைய ரஷ்யா தயார்?!’ - அதிபர் புதின் சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் ( ட்விட்டர் )

``உலகளாவிய உணவு நெருக்கடியைக் குறைக்க ரஷ்ய உக்ரைன் ஒப்பந்தம் உதவும்" - ஐ.நா

`தானிய ஏற்றுமதியில் உக்ரைனுடன் ஒன்றிணைய ரஷ்யா தயார்?!’ - அதிபர் புதின் சொல்வதென்ன?

``உலகளாவிய உணவு நெருக்கடியைக் குறைக்க ரஷ்ய உக்ரைன் ஒப்பந்தம் உதவும்" - ஐ.நா

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் ( ட்விட்டர் )

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்ததன் காரணமாக, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பலவும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதன் காரணமாக உலகச் சந்தையில் உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என அந்த நாட்டின் அதிபர் புதின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தானிய ஏற்றுமதி
தானிய ஏற்றுமதி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகியுடன் தொலைப்பேசியில் ரஷ்ய அதிபர் புதின் உரையாடிய போது, `உலகச் சந்தையில் உணவு விநியோகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது விதித்திருக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உடன்பட்டால் தானியங்கள், உரங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் உணவு நெருக்கடியைச் சமாளிக்க ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க ரஷ்யக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. உக்ரைன் தரப்பால் தடுக்கப்படும் அசோவ், கருங்கடல் துறைமுகங்களிலிருந்து பயணிகள் கப்பல்கள் வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தினசரி பாதைகளைத் திறந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என புதின் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் - ரஷ்யா ஒப்பந்தம்
உக்ரைன் - ரஷ்யா ஒப்பந்தம்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களிலிருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று கையெழுத்திட்டன, இது உலகளாவிய உணவு நெருக்கடியைக் குறைக்க உதவும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.