Published:Updated:

``ரஷ்ய ராணுவம், பாலியல் வன்கொடுமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” - ஐ.நா-வில் உக்ரைன் காட்டம்

ஐ.நா சபை

`உக்ரைனில் நிகழும் போரில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது’ என ஐ.நா-வில், ரஷ்யாமீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

``ரஷ்ய ராணுவம், பாலியல் வன்கொடுமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” - ஐ.நா-வில் உக்ரைன் காட்டம்

`உக்ரைனில் நிகழும் போரில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது’ என ஐ.நா-வில், ரஷ்யாமீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

Published:Updated:
ஐ.நா சபை

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர், கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல், பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், உக்ரேனிய குடிமக்களைப் படுகொலை செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் கூறிவந்தது. இது தொடர்பாக ஐ.நா சபையில் பலமுறை விவாதிக்கப்பட்டும், ரஷ்யா அதைத் தொடர்ந்து மறுத்துவந்தது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐ.நா-வில் ரஷ்யாமீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நாவில் ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
ஐ.நாவில் ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய La Strada-Ukraine எனும் மனித உரிமை அமைப்பின் தலைவர் Kateryna Cherepakha, ``சிறுமிகள் உட்பட 12 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பதிவான ஒன்பது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ரஷ்ய வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை நாங்களும் அறிவோம். அதேசமயம், எங்களின் குரலையும் நீங்கள் (ஐ.நா) கேட்க வேண்டும்" எனக் கூறினார்.

ஐ.நா-வில் உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த ரஷ்யாவுக்கான ஐ.நா-வின் துணைத் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, ``நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியதுபோல, உக்ரைன் மக்களின் மீது ரஷ்யப் படை ஒருபோதும் தாக்குதல் நடத்தாது. உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டு, வேண்டுமென்றே ரஷ்யா வீரர்களை சுயநலவாதிகளாகவும், பாலியல் வன்கொடுமைவாதிகளாகவும் காட்டுவதற்கான செயல்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism