Published:Updated:

`உக்ரைன் தலைநகரிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்!' - ரஷ்யா தகவல்

உக்ரைன்

உக்ரைன் மக்கள் தலைநகர் கீவிலிருந்து சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

`உக்ரைன் தலைநகரிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்!' - ரஷ்யா தகவல்

உக்ரைன் மக்கள் தலைநகர் கீவிலிருந்து சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையே ஐந்தாவது நாளாகப் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலின் தீவிரத்தை சற்றே குறைத்திருக்கின்றன. இந்தப் போரில் ரஷ்ய ராணுவத்தினர் 5,300 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல்தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

இந்த நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``உக்ரைன் மக்கள் தலைநகர் கீவில் இருந்து சுதந்திரமாக வெளியேறலாம். உக்ரைன் அரசு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது'' என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism