Published:Updated:

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் பாதி வழியிலேயே திரும்பியது!

ஏர் இந்தியா விமானம் ( ANI )

ரஷ்யா-உக்ரைன் இடையே போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் பாதி வழியிலேயே திரும்பியது!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறது.

Published:Updated:
ஏர் இந்தியா விமானம் ( ANI )

ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதால், உக்ரைனில் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா மோதல் காரணமாக உலக அளவில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்றது. அங்கு உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால், சிறிது நேரம் வானில் பறந்துகொண்டிருந்தது. அதன் பிறகு உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI1947 மீண்டும் பாதுகாப்பாக நாடு திரும்பியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைன்  -  ரஷ்யா போர்ப் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம்
ட்விட்டர்

இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதால், உக்ரைனில் தங்கியிருக்கும் 20,000-க்கும் அதிகமான இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ``உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அமைதியான முறையில் தீர்வு கண்டுகொள்ளலாம்" என ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவை வலியுறுத்திவருகிறது. அதேபோல, ``உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது. இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள்" என இந்திய தூதரகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism