Published:Updated:

``ரஷ்யாவின் செயல்கள் இப்போது தண்டிக்கப்படாவிட்டால்..!" - உக்ரைன் அமைச்சர் சொல்வதென்ன?

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரியோ குலேபா

ரஷ்யாவின் மீறல்கள் தண்டிக்கப்படாவிட்டால் உலக நாடுகள் பாதுகாப்பாக உணர முடியாது என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 6-வது நாளாகப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு பிற நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறத் தொடங்கிவிட்டனர். ரஷ்யாவின் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வை குறிவைத்து தாக்குதல்கள் நடத்திவந்த நிலையில், இன்று உக்ரைனின் மற்றொரு பெருநகரமான கார்கிவ்-ல் ரஷ்யப் படையினர் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ``கார்கிவ் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் ரஷ்யா ஒரு வெளிப்படையான பயங்கரவாத நாடாக மாறியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இந்த நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரியோ குலேபா, ``உலகளாவிய பாதுகாப்பின் எதிர்காலம் உக்ரைனில் தீர்மானிக்கப்படுகிறது. ரஷ்யாவின் மீறல்கள் தண்டிக்கப்படாவிட்டால் உலக நாடுகள் பாதுகாப்பாக உணராது" என கூறியுள்ளார்.

முன்னதாக உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யப் படையினர் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த நவீன் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism