ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், `உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதற்ற சூழல் காரணமாக உக்ரைன் முழுவதும் விமான சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தின் முக்கிய இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர், ``ரஷ்யாவின் ராணுவப் படைகள் உக்ரைன் எல்லையில் நுழையத் தொடங்கிவிட்டன. உக்ரைன் மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. ரஷ்யா நடத்துவது ஆக்கிரமிப்பு போர். உக்ரைனின் அமைதியான நகரங்கள்மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. உக்ரைன்மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலக நாடுகள் தடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
