Published:Updated:

`ரஷ்யர்களாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம்...' - புதினுக்கு எதிராக ரஷ்ய மக்கள் போராட்டம்!

ரஷ்யா

ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி ரஷ்ய மக்களும் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ராணுவ படைகளை நிறுத்திவைத்து அச்சுறுத்தி மட்டுமே வந்தது. இந்த விவகாரத்தில் நெடுநாள்களாக வெறும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின் நேற்று தனது ராணுவ படைகளுக்கு உக்ரைன் மீது போர்தொடுக்க உத்தரவிட்டார்.

உக்ரைன்
உக்ரைன்

இதையடுத்து நேற்றிலிருந்து உக்ரைனில் போர் நடத்தி வரும் ரஷ்ய படைகளால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் இறந்து விட்டதாக உக்ரைன் கூறியிருந்தது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர், ``இந்த போரில் உலக நாடுகள் எங்களுக்கு உதவ இதுவரை யாரும் முன்வரவில்லை, நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்" என உருக்கமாக பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்யா
ரஷ்யா

ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி ரஷ்ய மக்களும் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரங்களில் மக்கள் அதிபர் புதினுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். முன்னதாக நேற்றைய தினம் அரசுக்கு எதிராகப் போராடினால், கடும் விளைவுகளச் சந்திக்க நேரிடும் என பொதுமக்களை ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இருப்பினும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்ய மக்கள் வீதிகளில், ``ரஷ்யராக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். புதின் அரசு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இன்று உக்ரைன், நாளை நீங்களாகக் கூட இருக்கலாம்" என்று வாசகமிடப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism