Published:Updated:

ஒரேநாளில் 800 ரஷ்ய வீரர்கள் பலி?! - உக்ரைன் ராணுவம் தகவல்

விளாதிமிர் புதின், ஜெலென்ஸ்

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரேநாளில் 800 ரஷ்ய வீரர்கள் பலி?! - உக்ரைன் ராணுவம் தகவல்

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
விளாதிமிர் புதின், ஜெலென்ஸ்

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியது. பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்துவரும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர, உலக நாடுகள் முயன்றுவருகின்றன. உக்ரைனின் டொனென்ஸ்ட் மாகாணத்தை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று ரஷ்யப் படைகள் நிலைகொண்டிருந்த மகிவிகா நகரிலுள்ள கட்டடம் ஒன்றின்மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், சுமார் 400-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்தத் தாக்குதலை ரஷ்யப் படைகளும் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், அதில் 63 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் ஒரே தாக்குதலில் இத்தனை ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, ரஷ்யா தனது பதிலடியைத் தொடங்கிவிட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் நகரிலுள்ள முக்கிய கட்டடங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவமும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கி நடத்திவருகிறது. உக்ரைனும் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் நேற்று வெளியிட்டிருக்கிற தகவலில், கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ஒரே நாளில் மட்டும் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் செய்யவில்லை.

இதற்கிடையில், பண்டைய ஜூலியன் நாட்காட்டியைப் பயன்படுத்தும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச், கிறிஸ்துமஸை ஜனவரி 7 அன்று கொண்டாடுகிறது.

புதின்
புதின்

உக்ரைனில் உள்ள சில கிறிஸ்தவர்களும் அதே தேதியில்தான் கிறிஸ்துமஸைக் கொண்டாடிவருகின்றனர். எனவே, தற்காலிகமாவது போரை நிறுத்தவேண்டுமென, ரஷ்யாவின் ஆன்மிகத் தலைவர் கிரில்லின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆன்மிகத் தலைவரின் கோரிக்கையை ஏற்ற ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.