Published:Updated:

உக்ரைன்: அவசரகால நிலை பிரகடனம்? - தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தகவல்!

உக்ரைன் நாட்டின் கொடி

உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன்: அவசரகால நிலை பிரகடனம்? - தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தகவல்!

உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Published:Updated:
உக்ரைன் நாட்டின் கொடி

ரஷ்ய படையின் மவுன அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் போர் பதற்றமானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றுகூட மாக்ஸர் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் ரஷ்யாவின் படைகள் உக்ரைனிலிருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது உக்ரைனில் பதற்ற நிலையை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள்
புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள்
AP

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடத்தில் பேசிய உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர், ``அதிகரித்து வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு உக்ரைனில் அவசரகால நிலை பிரகடனப்படுத்துவது குறித்து விவாதித்து முடிவெடுத்துள்ளோம். சட்டப்படி உக்ரைன் பாராளுமன்றம் எங்களின் முடிவை 48 நிமிடங்களில் அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளைத் தவிர உக்ரைன் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும். பின்னர் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்து நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுவதும், மென்மையாக்கப்படுவதும் இருக்கும். தற்போது முதலில் 30 நாள்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். தேவையைப் பொறுத்து இது 60 நாள்களுக்கு நீட்டிக்கப்படலாம்" என்று கூறினார்.