Published:Updated:

``நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்!” -ஐரோப்பிய நாடாளுமன்றமே எழுந்து நின்ற ஜெலன்ஸ்கி-யின் உரை

ஜெலன்ஸ்கி உரை ( AP )

"நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள். எங்களைவிட்டு நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் வாழ்க்கை மரணத்தை வெல்லும்." - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

``நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்!” -ஐரோப்பிய நாடாளுமன்றமே எழுந்து நின்ற ஜெலன்ஸ்கி-யின் உரை

"நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள். எங்களைவிட்டு நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் வாழ்க்கை மரணத்தை வெல்லும்." - உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

Published:Updated:
ஜெலன்ஸ்கி உரை ( AP )

ரஷ்யப் படைகள் நேற்று ஆறாவது நாளாக உக்ரைனில் தொடர் தாக்குதல் நடத்தின. முக்கியமாக, உக்ரைனின் கார்கிவ் நகரைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் அத்துமீறல்களைக் கண்டிக்கும்விதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, "கார்கிவ் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் ரஷ்யா ஒரு வெளிப்படையான பயங்கரவாத நாடாக மாறியுள்ளது.

காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

குழந்தைகளைக்கூட குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்கிவருகின்றன. எங்களது பொருளாதாரத்தை முற்றிலுமாக ரஷ்யா அழித்துவருகிறது. எங்கள் நகரங்கள் அனைத்தும் தாக்கப்பட்டபோதிலும், எங்கள் நிலத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும் தொடர்ந்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள். நாங்கள் உக்ரேனியர்கள். நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபியுங்கள். எங்களைவிட்டு நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐரோப்பிய நாடளுமன்றம்
ஐரோப்பிய நாடளுமன்றம்

அப்போதுதான் எங்கள் வாழ்க்கை மரணத்தை வெல்லும், ஒளி இருளை வெல்லும். நீங்கள் இல்லாமல், உக்ரைன் தனிமையில் இருக்கும். நீங்கள் எங்களுடன் இருந்தால் உக்ரைன் மிகவும் வலுவாக இருக்கும்" என உணர்ச்சிமிக ஆவேசமாகப் பேசினார். வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசி முடித்த பிறகு அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டல்களுடன், கரகோஷம் எழுப்பினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், கடந்த திங்கள் அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கள் நாடும் இணைவதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டிருந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism