Published:Updated:

`நேட்டோ, உக்ரனை ஏற்கத் தயாராக இல்லை... மண்டியிடும் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை!'- ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( Efrem Lukatsky )

"நேட்டோ உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ரஷ்யாவுடனான மோதலுக்கு நேட்டோ பயப்படுகிறது" என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

`நேட்டோ, உக்ரனை ஏற்கத் தயாராக இல்லை... மண்டியிடும் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை!'- ஜெலன்ஸ்கி

"நேட்டோ உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ரஷ்யாவுடனான மோதலுக்கு நேட்டோ பயப்படுகிறது" என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( Efrem Lukatsky )

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே பிப்ரவரி 24 முதல் 13 நாள்களுக்கு மேலாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரு நாட்டினரும் போரை நிறுத்துவது தொடர்பாக முதல் இரண்டுமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாத நிலையில், மூன்றாவதாக பெலாரஸில் நடந்த பேச்சுவார்த்தையில், சிறிய முன்னேற்றம் அடைந்திருப்பதாக ரஷ்ய பேச்சுவார்தைக்குழு தலைவர் கடந்த திங்கள் அன்று கூறியிருந்தார். அதேவேளையில் அந்தப் பேச்சுவார்த்தையில், எங்களது எதிர்பார்ப்புகள் ஏதும் நிறைவேறவில்லை எனவும் ரஷ்ய பேச்சுவார்த்தைக்குழுத் தலைவர் கூறியிருந்தார். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "நேட்டோ, உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை" என தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

அதில் பேசிய ஜெலன்ஸ்கி, ``நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எனக்கு எப்போதோ ஆர்வம் குறைந்துவிட்டது. உக்ரைனைச் சேர்த்துக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை எனத் தெரிந்த பிறகு அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டேன். நேட்டோ எங்களை ஏற்கத் தயாராக இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். சர்ச்சைக்குரிய விவகாரங்கள், ரஷ்யாவுடானான மோதல் ஆகியவற்றுக்கு நேட்டோ கூட்டணி பயப்படுகிறது. மண்டியிட்டு யாசகம் பெறும் நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. நாங்கள் இறுதி எச்சரிக்கைகளுக்குத் தயாராக இல்லை. இனி செய்யவேண்டியது, புதின் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்குங்கள்" எனப் பேசினார்.

அதிகாரபூர்வமாக இரு நாட்டுத் தரப்பிலிருந்தும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இதுவரையில் எந்தச் செய்தியும் வெளிவராத நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு பேசியிருப்பது சர்வதேச கவனம் பெற்றிருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism