Published:Updated:

``எதிர்த் தாக்குதல் குறித்து யாரிடமும் பகிர வேண்டாம்" - ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

``எதிர்த் தாக்குதல் திட்டங்கள் பற்றி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்கள் பொறுப்பு என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்." - ஜெலன்ஸ்கி

``எதிர்த் தாக்குதல் குறித்து யாரிடமும் பகிர வேண்டாம்" - ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவு

``எதிர்த் தாக்குதல் திட்டங்கள் பற்றி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்கள் பொறுப்பு என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்." - ஜெலன்ஸ்கி

Published:Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவரும் நிலையில், `போர் குறித்து செய்தியாளர்களிடம் எதையும் பகிர வேண்டாம்’ என ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

முன்னதாக, கடந்த செவ்வாயன்று கிரிமியாவில், ரஷ்ய ராணுவ தளத்தின் மீது பெரும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்திருக்கிறது. பின்னர் இந்தத் தாக்குதல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்கள், அடையாளம் தெரியாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி உக்ரேனியப் படைகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறின. ஆனால், உக்ரைன் தரப்பிலிருந்து இது குறித்து எந்த பதிலும் வரவில்லை.

 ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா, உக்ரைன் போர்

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர்த் திட்டம் மற்றும் அதன் அறிக்கைகள் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதில் பேசிய ஜெலன்ஸ்கி, ``போர் என்பது நிச்சயமாக வீண் மற்றும் உரத்த அறிக்கைகளுக்கானதல்ல. நம்முடைய பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து நீங்கள் எவ்வளவு குறைவான விவரங்களை வெளியிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு நம் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

தலைப்புச் செய்திகளை நீங்கள் உருவாக்க விரும்புவது, வெளிப்படையாகவே ஒரு பொறுப்பற்ற செயல். தற்காப்பு மற்றும் எதிர்த் தாக்குதல் திட்டங்கள் பற்றி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும், உங்களுடைய பொறுப்பு என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இது ஒருபுறமிருக்க, உக்ரைனும் ரஷ்யாவும், உக்ரைனிலுள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்துக்கருகில் நேற்று ஷெல் தாக்குதலில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.