Published:Updated:

புத்தாண்டில் திருப்பி அடித்த உக்ரைன்: உக்கிரமடையும் போர்... 63 ரஷ்ய வீரர்கள் பலி!

ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புத்தாண்டில் திருப்பி அடித்த உக்ரைன்: உக்கிரமடையும் போர்... 63 ரஷ்ய வீரர்கள் பலி!

புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்
News
ரஷ்யா - உக்ரைன் போர்

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது. பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயன்றுவருகின்றனர். இந்தச் சூழலில், புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம், ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைனின் டொனென்ஸ்ட் மாகாணத்தை ரஷ்யப்படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று ரஷ்ய படைகள் நிலை கொண்டிருந்த மகிவிகா நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில், சுமார் 400-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலை ரஷ்ய படைகளும் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், அதில் 63 வீரர்கள் மட்டுமே இதில் உயிரிழந்ததாக தெரிவித்திருக்கிறது. ஒரே தாக்குதலில் இத்தனை ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, ரஷ்யா தனது பதிலடியைத் தொடங்கிவிட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் உள்ள முக்கிய கட்டடங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ட்ரோன் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

புதின், ஜெலென்ஸ்கி
புதின், ஜெலென்ஸ்கி

சுமார் 40 ட்ரோன், ஏவுகணைகள் உக்ரைனை நோக்கி வந்ததாகவும், அத்தனையையும் உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், சில மின்சார நிலையங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது என கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று வந்த பிறகு மீண்டும் போர் உக்கிரமடைய தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.