Published:Updated:

`இந்தியா எங்களை ஆதரிக்கவில்லை..!' - உக்ரைன் எல்லையில் தாக்கப்படுகிறார்களா இந்திய மாணவர்கள்?

உக்ரைன் - இந்திய மாணவர்கள்

ஐ.நா சபையில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா உக்ரைனை ஆதரிக்கவில்லை எனக் கூறி உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்திய மாணவர்களை அடித்து மிரட்டுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`இந்தியா எங்களை ஆதரிக்கவில்லை..!' - உக்ரைன் எல்லையில் தாக்கப்படுகிறார்களா இந்திய மாணவர்கள்?

ஐ.நா சபையில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா உக்ரைனை ஆதரிக்கவில்லை எனக் கூறி உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்திய மாணவர்களை அடித்து மிரட்டுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
உக்ரைன் - இந்திய மாணவர்கள்

உக்ரைனில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகிறார்கள். மாணவர்கள் 72 மணி நேரத்துக்கும் மேலாக, கடும் குளிரில் சிக்கித் தவித்துவருகின்றனர். உக்ரைனிலிருந்து போலந்து எல்லை வழியாக வரும் இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் அடித்து மிரட்டுவதாகவும், சிலரிடமிருந்து செல்போன்களைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை நோக்கி ``உங்கள் இந்திய அரசு எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, அதனால் நாங்கள் ஏன் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" எனக் கடுமையாகப் பேசுவதாகவும், இந்திய மாணவர்கள் பலர் குற்றம்சாட்டிவருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா விலகிக்கொண்டதால், உக்ரைன் எல்லையைக் கடக்கும்போது இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பான வீடியோ ஒன்றை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ``உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது. இந்தியர்களை மீட்பதற்கான விரிவான திட்டத்தை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism