Published:Updated:

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்... ஐ.நா அவசரக் கூட்டம்! - அடுத்தது என்ன?!

உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

ரஷ்யா தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்... ஐ.நா அவசரக் கூட்டம்! - அடுத்தது என்ன?!

ரஷ்யா தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

Published:Updated:
உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

உக்ரைன் - ரஷ்யா இடையே ஐந்தாவது நாளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உலக நாடுகள் கோரிக்கை வைத்துவருகின்றன. ரஷ்யா, 'பெலாரஸில்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதற்குச் சம்மதம் என்றால் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி "பெலாரஸ் பகுதி வேண்டாம். வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு இவற்றில் ஏதேனும் ஒரு பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்" எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா
ரஷ்யா

இந்த நிலையில், ரஷ்யா தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

மேலும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு 352 குடிமக்கள் உயிரிழந்ததாகவும், ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி முடிவுசெய்து, பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

அதன் பிறகு எந்த முன்நிபந்தனையும் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்றும், உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஐ.நா சபை
ஐ.நா சபை
John Minchillo

இந்த நிலையில், உக்ரைன்மீது ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் தவிர மற்ற 11 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism