Published:Updated:

உக்கிரமடைந்த உக்ரைன் - ரஷ்யா போர்; இரு நாட்டுப் பிரச்னைக்கு யார் காரணம், என்ன காரணம்? - ஓர் அலசல்!

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் போருக்கு என்ன காரணம், யார் காரணம்?!

உக்கிரமடைந்த உக்ரைன் - ரஷ்யா போர்; இரு நாட்டுப் பிரச்னைக்கு யார் காரணம், என்ன காரணம்? - ஓர் அலசல்!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் போருக்கு என்ன காரணம், யார் காரணம்?!

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர்

பிரிந்த சோவியத்:

கடந்த 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் 15 நாடுகளாகப் பிரிந்தது. அப்படிப் பிரிந்து வந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. தனிநாடாக மாறிய உக்ரைனில் இன்றளவும் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி பேசுபவர்கள்தான். சோவியத் யூனியனாக இருந்த சமயத்தில் உலகின் வல்லரசு நாடாக இருந்தது ரஷ்யா. பிரிவுக்குப் பின்னர் அந்த நிலை தலைகீழ் ஆனது. இந்த வருத்தமும் கோபமும் ரஷ்யாவுக்கு ஆறாத வடுவாக மாறிப்போயின. சோவியத் யூனியில் அங்கம் வகித்த லாட்வியா, லிதுவேனியா போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தன. ஜார்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளும் நேட்டோவில் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

நேட்டோ (The North Atlantic Treaty Organization - NATO) என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. 1949-ம் ஆண்டு உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, நார்வே, போர்ச்சுகல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவான ராணுவக் கூட்டமைப்புதான் நேட்டோ அமைப்பு. தற்போது 30 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அமைப்பின் ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால், பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெடித்த போர்:

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இணையக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. உக்ரைன், நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ரஷ்யா எண்ணுகிறது. ரஷ்யாவின் வலியுறுத்தலையும் மீறி உக்ரைன் நேட்டோவில் இணைவதற்குக் காரணம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனிலிருந்த க்ரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்
உக்ரைன் அதிபர் - ரஷ்ய அதிபர்

மேலும், கிழக்கு உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினைவாதிகளையும் ரஷ்யா மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவருகிறது. உக்ரைன் எல்லைகளில் பல்வேறு பிரச்னைகள் நீடித்துவருகின்றன. நேட்டோவில் உறுப்பு நாடாக தன்னை இணைத்துக்கொண்டால், எல்லையில் பிரச்னை மற்றும் கிளர்ச்சியாளர்களைச் சமாளிக்க உதவும் என்று நம்புகிறது. மேலும், உக்ரைனைவிட அதிக ராணுவ பலம் பொருந்திய நாடு ரஷ்யா. ரஷ்யாவைத் தனித்தனியாக எதிர்ப்பது முடியாத காரியம். இதனால்தான், எப்படியாவது நேட்டோவில் இணைய வேண்டும் என்று முயல்கிறது உக்ரைன். உக்ரைன் நேட்டோவில் உறுப்பு நாடக இணையக் கூடாது என்று போர் தொடுத்துள்ளது ரஷ்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் இந்தப் போர்?!

இந்தப் போர் காரணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். ``அடிப்படையில் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று நடைபெறும் போர்தான் இது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பொருளுதவி, நிதியுதவி செய்து அந்த நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதேபோலத்தான் ரஷ்யாவும் செயல்பட்டுவருகிறது. சோவியத்துக்கு முன்னதான ஒரு ரஷ்யப் பேரரசைக் கட்டமைக்க வேண்டும் என்று புதின் எண்ணுகிறார். சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகள் சில ஏற்கெனவே நேட்டோவில் இணைந்துவிட்டன. ஆனால், உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா கொஞ்சமும் விரும்பவில்லை. உக்ரைன் பல்வேறு வளம் பொருந்திய நாடு. அப்படியான ஒரு நாடு ரஷ்யாவுடன் இருந்தால் அது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

தொடர்ந்து பேசியவர், ``ஏற்கெனவே, உக்ரைன் எல்லையோரத்தில் கிளர்ச்சியாளர்களைத் தூண்டிவிட்டு, பின்னின்று போராட்டத்தை நடத்தியது ரஷ்யா. அந்தச் சண்டையில் 11 ஆயிரம் மக்கள் இறந்து, 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் அகதிகளாகியிருக்கிறார்கள். தற்போது அணு ஆயுதம் தயாரிப்பது, நேட்டோவில் இணையக் கூடாது என்று சப்பைக்கட்டுக் கட்டி போரை நடத்திக்கொண்டிருக்கிறது ரஷ்யா. ஆனால், இவர்கள் சொல்லும் எந்தக் காரணத்தையும் உலக நாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யாவுக்குச் சொந்த நாட்டு மக்கள் உட்பட அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேநேரத்தில் உக்ரைனுக்கு மற்ற நாடுகள் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன. ஆரம்பித்த போரை நிறுத்த முடியாமல், போரைத் தீவிரப்படுத்தியுள்ளார் புதின். தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியைக் கொல்ல பல்வேறு தொடர் தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா. அப்படி அதிபர் இறந்துவிட்டால், முன்னிருந்ததுபோல, தன் சொல்லைக் கேட்டு ஆட்சி நடத்தும் ஒருவரை அதிபராக நியமித்து மறைமுகமாக நாட்டை ரஷ்யா இயக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism