Published:Updated:

அங்கே உருக்குலையும் உக்ரைன்... இங்கே உடல் நடுங்கும் புதின் (?) - ஒரு ஹெல்த் அப்டேட்

ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

கடந்த சில நாள்களாகவே ரஷ்யா அதிபர் புதினின் உடல்நிலை பலவீனமடைந்துவருவதாகப் பல்வேறு தகவல்கள் உலாவந்தன. அதை மறுத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் கருத்துகளில் உண்மை இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால்?

அங்கே உருக்குலையும் உக்ரைன்... இங்கே உடல் நடுங்கும் புதின் (?) - ஒரு ஹெல்த் அப்டேட்

கடந்த சில நாள்களாகவே ரஷ்யா அதிபர் புதினின் உடல்நிலை பலவீனமடைந்துவருவதாகப் பல்வேறு தகவல்கள் உலாவந்தன. அதை மறுத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் கருத்துகளில் உண்மை இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால்?

Published:Updated:
ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நான்கு மாதங்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. முடிவடையாத போரால் இரண்டு நாடுகளும் கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன. உக்ரைன் தனது ராணுவம் மற்றும் பொதுமக்களின் உயிரையும், நிலப்பரப்பையும் வேகமாக இழந்துவருகிறது. ரஷ்யா, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை சுமந்துகொண்டிருக்கிறது. மேலும், உக்ரைனுக்கு இணையாகத் தங்களின் ராணுவ வீரர்களை இழந்துவருகிறது. இதுவரை, 32,950 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்திருப்பதாக உக்ரைன் தெரிவிக்கிறது. ஆனால் ரஷ்யத் தரப்போ இதை முற்றிலுமாக மறுக்கிறது. மேலும், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், `இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்தே உக்ரைன் இல்லாமல் போகலாம்' என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புதின் உடல்நிலை பலவீனமடைந்துவருவதாகப் பல்வேறு தகவல்கள் உலாவந்தன. அதை மறுத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் கருத்துகளில் உண்மை இல்லை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் க்ரெம்லினில் நடைபெற்ற ரஷ்ய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற புதின், உரை நிகழ்த்தும்போது அவரது கால்கள் நடுங்குவது போன்றும், நிற்கவே முடியாமல் சிரமமப்படுவது போன்றும் உள்ள வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதினின் உடல்நிலை குறித்தான செய்திகள் வதந்திகள் எனக் கூறப்பட்ட நிலையில், புதினின் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டும், சர்வதேச ஊடகங்களிலும் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டும்வருகிறது.

புதின்
புதின்

இந்த நிலையில், புதின் உடல்நிலை குறித்து கூறப்படும் செய்திகளைப் பற்றி சற்றுக் காண்போம்.

மங்கி வரும் கண்பார்வை:

புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், டி.வி நிகழ்ச்சிகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்கும்போது ஏதேனும் வாசிக்க நேர்ந்தால், மிகப்பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தால் மட்டுமே அவரால் படிக்க முடிகிறது என்றும் அதற்காக அவர் வாசிக்கும் அறிக்கையில், பக்கத்துக்கு இரண்டு வாக்கியங்கள் என்ற அளவில் வார்த்தைகள் பெரிதாக இருக்கும்படி தட்டச்சு செய்து தயாரிக்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

புதின்
புதின்

கணையப் புற்றுநோய்:

புதின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதை ரஷ்ய அதிபர் மாளிகை மருத்துவர்கள் உறுதிசெய்திருப்பதாகவும் ரஷ்யப் பத்திரிகையாளர் மார்க் கோட்லியார்ஸ்கி தெரிவித்திருக்கிறார். மேலும், ரஷ்ய அதிபரிடம் கண்டறியப்பட்டிருக்கும் இந்த நோய் ஒரு வீரியமிக்க கட்டி என்றும், அது உறுப்பு வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படுவதாகவும் அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களில் புதினுக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மார்க் கோட்லியார்ஸ்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரத்தப் புற்றுநோய்:

முன்னாள் பிரிட்டிஷ் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல் என்பவர், ``ரஷ்யா மற்றும் பிற பகுதிகளிலிருந்து வரும் தகவல்படி புதின் உடல்நலம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்றும் ஸ்கை நியூஸ் ஊடகத்துக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

புற்று நோய்
புற்று நோய்

பார்க்கின்சன் நோய்:

`புதினின் சமீபத்திய வீடியோக்களில் அவரால் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கை கால்கள் உதறுகின்றன. சமீபத்தில் புதின் பெலாரஸ் அதிபருடனான ஒரு சந்திப்பில், தனது கைகளை வைத்து மேசையை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருப்பது போன்றும், கால்களைத் தொடர்ந்து அசைத்துக்கொண்டிருப்பது போன்றும் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, ஈஸ்டர் தினத்தில் தேவாலயம் சென்ற புதின், உதட்டைக் கடித்துக்கொண்டு படபடப்புடன் காணப்படும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதின்
புதின்

மேலும், ஓரிடத்தில் அமைதியாக நிற்காமல் உடலை அசைத்துக்கொண்டும், உலர்ந்த வாயை ஈரப்படுத்திக்கொண்டும் இருந்த வீடியோவும் வெளியாகின. இவை அனைத்துமே பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள்' என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

சூட்கேஸில் சேகரிக்கப்படும் கழிவுகள்:

மேலும், புதினின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அவர் வெளியேற்றும் கழிவுகளை அவரின் பாதுகாவலர்கள் சூட்கேஸில் சேகரிப்பதாக விநோத தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதாவது, `புதினின் மலம், சிறுநீரைக்கொண்டு அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை எதிரிகள் கண்டுபிடித்துவிட வாய்ப்பு இருப்பதால், புதின் கழிவறைக்குச் செல்லும்போது அவருடன் பிரத்யேக பாதுகாவலரும் உடன் சென்று அவரின் கழிவுகளைத் தனியாக சேகரிக்கிறார்களாம். பிறகு அதை பத்திரமாக ரஷ்யாவுக்குக் கொண்டுவந்து அழித்துவிடுகிறார்' என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்
russia ukraine war

அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்:

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஊடகமான The Independent-ல் ரஷ்ய உளவாளி ஒருவர், ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதாகவும், அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருக்கிறார். மேலும் அந்தச் செய்தியில், பிரிட்டனில் வாழும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவ், ரஷ்ய அதிபரின் புதினின் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருப்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரஷ்யத் தரப்பிலிருந்து புதினின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், புதின் முன்புபோல் அதிக அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இது வெளி வரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பதாக இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism