உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில வாரங்களாகத் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றும் விதமாக, தற்போது ரஷ்ய ராணுவப் படையால் உக்ரைனின் மெலிடோபோல் நகரைச் சுற்றித் தாக்குதல் நடத்தியது.

இந்தநிலையில், உக்ரைன் அரசின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளதாவது, ``எதிரியுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்ட காரணத்தால், 10 ஆக்கிரமிப்பாளர்கள் கொண்ட குழு மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திவிட்டனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக இது தொடர்பாகப் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைன் மக்களை தைரியமாக பாதுகாத்து வந்த மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்ய ராணுவ வீரர்கள் கடத்தியிருக்கின்றனர். 100 சதவிகிதம் ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தெரியும். மேயர் இவான் ஃபெடோரோவை கடத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான போர் குற்றம். ரஷ்ய ராணுவ வீரர்களின் இந்த செயல் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயல்களோடு ஒத்துப்போவதாக உள்ளது'' என்றார்.