Published:Updated:

``ரஷ்யா, ஸ்னேக் தீவு மீது பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை வீசுகிறது" - குற்றம்சாட்டும் உக்ரைன்

ஸ்னேக் தீவு ( ட்விட்டர் )

உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

``ரஷ்யா, ஸ்னேக் தீவு மீது பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை வீசுகிறது" - குற்றம்சாட்டும் உக்ரைன்

உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
ஸ்னேக் தீவு ( ட்விட்டர் )

கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்றுவரை நீடித்துக்கொண்டேயிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப் பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்துவருகின்றன என உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், உலக நாடுகள் ரஷ்யாமீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்குப் பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கிவருகின்றன.

இதற்கு மத்தியில், உக்ரைனின் எல்லையில் அமைந்திருக்கும் கருங்கடல் பகுதியில் ஸ்னேக் தீவு அமைந்திருக்கிறது. அந்த ஸ்னேக் தீவை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையொட்டி, ஸ்னேக் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறின. இருப்பினும் இன்று ஸ்னேக் தீவுமீது ரஷ்யப் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து உக்ரைன் ராணுவம், "ரஷ்ய விமானப் படையின் சுகோய்-30 விமானங்கள், ஸ்னேக் தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தின. இந்த நிலையில், ஸ்னேக் தீவிலிருந்து படைகளை விலக்கிக்கொண்ட பிறகும், அங்கிருந்து அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்பப் பெற முடியாத காரணத்தால், அதை ரஷ்யா பாஸ்பரஸ் ரக குண்டுகளை வீசி அழித்திருக்கலாம்'' எனத் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான வீடியோவும், செயற்கைக்கோள் படமும் வெளியாகியிருக்கிறது. பாஸ்பரஸ் குண்டுகள் மிகக் கொடூரமானவை. இது வெடித்துச் சிதறும்போது மிக அடர்த்தியான வெண் புகைமண்டலத்தை உருவாக்கும். இதனால் சர்வதேசப் போர் விதிகளின் கீழ் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!