Published:Updated:

உக்ரைன்: `இதுவரைக்கும் எங்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யல!' - தவிக்கும் தமிழக மாணவர்கள்

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள்

'உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு எப்ப சொந்த ஊருக்கு போவோம் என்கிற எண்ணத்தில் எல்லாருமே இருக்கோம். தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து இங்கே இருக்கிற கிட்டத்தட்ட 5000 மாணவர்களுக்கு உதவி செய்யணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை!'

உக்ரைன்: `இதுவரைக்கும் எங்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யல!' - தவிக்கும் தமிழக மாணவர்கள்

'உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு எப்ப சொந்த ஊருக்கு போவோம் என்கிற எண்ணத்தில் எல்லாருமே இருக்கோம். தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து இங்கே இருக்கிற கிட்டத்தட்ட 5000 மாணவர்களுக்கு உதவி செய்யணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை!'

Published:Updated:
உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள்

'உக்ரைனில் தொடர்ந்து நாளுக்கு நாள் போர் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அங்கே படிப்பதற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையுடன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கீழச்சீவல்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

உக்ரைன்
உக்ரைன்

நாங்க கார்கிவ்வில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பாடுகூட இல்லாம மெட்ரோ ஸ்டேஷனில் தங்கி இருந்தோம். அங்கே எங்க இடத்தை சுற்றி அதிகமா பாம் பிளாஸ்ட் நடந்துச்சு. நாங்களும் அந்த மெட்ரோ ஸ்டேஷனில் இருந்தே வீடியோ எடுத்து சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டோம். அந்த வீடியோவை பலர் பார்த்திருந்தாங்க. ஆனா, யாரும் எதுவும் பண்ணலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரி, இதுக்கு மேல இங்கேயே இருக்க வேண்டாம் நாமளாகவே வெளியே போய் ஏதாவது டிரான்ஸ்போர்ட் வசதி இருக்கான்னு பார்க்கலாம்னு முடிவு பண்ணி அங்கே இருந்து கிளம்ப முடிவு பண்ணினோம். அந்த சமயம், எங்களை உக்ரைன் காலேஜில் சேர்த்துவிட்ட ஏஜென்ட் அங்கே வந்தார். அவருடைய உதவியோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு கிட்டத்தட்ட 20 மாணவர்கள் ( 6 பொண்ணுங்க, 14 பசங்க) வந்தோம். அங்க வந்த பிறகு தான், டிரெயின் போகுற விஷயமே எங்களுக்கு தெரிஞ்சது. பயங்கரமான கூட்டத்தில் அடிச்சு, பிடிச்சு ஏறினோம்.

உக்ரைன்
உக்ரைன்

எம்பஸியில் ஈஸியா டிரெயின் வசதியெல்லாம் இருக்கு.. டிக்கெட் ஃப்ரீ தான்.. நீங்க வந்திடுங்கன்னு சொல்றாங்க. ஆனா, அவ்வளவு கூட்டத்தில் டிரெயினில் ஏறவே அவ்வளவு போராட வேண்டியிருந்தது. எங்க கூட வந்த என் சீனியர் ஒருவர் டிரெயின் ஏறும்போது அவரை கீழே பிடிச்சு இழுத்து போட்டுட்டாங்க. அவர் பிறகு, எப்படியோ வேற கம்பார்ட்மென்ட்டில் ஏறி பாத்ரூம் பக்கத்திலேயே உட்கார்ந்து வந்திருக்கார். ரெண்டு நாளாக டிராவல் பண்ணி இன்னைக்கு தான் Lviv வந்திருக்கோம். டிரெயின் விட்டு இறங்கி வெளியில் வந்ததும் ஒரு கோயிலில் இருந்து சாப்பாடும், தண்ணீர் பாட்டிலும் இலவசமா கொடுத்தாங்க. அதை சாப்பிட்டுட்டு தான் உட்கார்ந்திருக்கோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கே அலாரம் சத்தம் மட்டும்தான் கேட்குது. இப்பவரைக்கும் எந்த அட்டாக்கும் நடக்கலை. இந்த ஊர் பார்டருக்கு பக்கத்தில் என்பதால், பார்டர் போயிடலாம் நம்மள எப்படியும் ஊருக்கு கூட்டிட்டு போயிடுவாங்க என்கிற நம்பிக்கையில் எம்பஸியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனா, அவங்க எந்த உதவியும் இப்ப வரைக்கும் பண்ணலை. இங்கே எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை. எல்லா விலையும் டபுள் மடங்கா இருக்கு. இப்ப எங்க ஏஜென்ட்டுடைய ஃப்ரெண்டோட அபார்ட்மெண்ட் வீட்டில் தங்கியிருக்கிறோம். இன்னைக்கு அங்கே இருக்கிற மத்த எல்லாரும் கிளம்புறாங்க. நாங்களும் பிரைவேட் பஸ்ஸில் கிட்டட்தட்ட 65000 ரூபாய் கொடுத்து புக் பண்ணியிருக்கோம். அந்த பஸ்ஸில் பார்டரை தாண்டி நாங்க போகிறதுக்கு எம்பஸியுடைய அனுமதி தேவை. பார்டரில் பெண்களுக்கு Harassment நடக்குது. அதனால, எம்பஸியில் எங்க 20 பேருடைய பெயரை கன்பார்ம் பண்ணனும். அவங்க சொன்ன தான் பாதுகாப்பா எங்களால் பார்டர் தாண்ட முடியும். அதனால, அவங்களுடைய கன்பர்மெஷனுக்காக தான் நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.

உக்ரைன்
உக்ரைன்

காலையில் இருந்து நாங்க 20 பேரும் வெவ்வேறு மீடியாவில் பேசிட்டு இருக்கோம். ஆனா, எதற்குமே இப்ப வரைக்கும் எந்த பலனும் இல்லை. உயிரைக் கையில் பிடிச்சிகிட்டு எப்ப சொந்த ஊருக்கு போவோம் என்கிற எண்ணத்தில் எல்லாருமே இருக்கோம். தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து இங்கே இருக்கிற கிட்டத்தட்ட 5000 மாணவர்களுக்கு உதவி செய்யணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. இப்ப நாங்க இருக்கிற இடம் தான் உக்ரைனின் முக்கிய நகரம். அடுத்தகட்டமா இங்கே தான் போர் நடக்கும். அதுக்கு முன்னாடி எப்படியும் நம்மளை சொந்த ஊருக்கு கூட்டிட்டு போயிடுவாங்க என்கிற நம்பிக்கையில் இருக்கிறவர்களுக்கு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு அவங்க நம்பிக்கையை காப்பாற்றணும்!' என்றவரிடம் அவருடன் இருக்கும் மாணவிகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டோம்.. அதற்கு, 'அவங்க ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்காங்க !' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism