Published:Updated:

`` புதினுடன் மோடி பேச வேண்டும்!" - இந்தியாவுக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்

பிரதமர் மோடி ( ட்விட்டர் )

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுப்பைத் தொடங்கியுள்ள நிலையில், போரைத் தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

`` புதினுடன் மோடி பேச வேண்டும்!" - இந்தியாவுக்கு உக்ரைன் தூதர் வேண்டுகோள்

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுப்பைத் தொடங்கியுள்ள நிலையில், போரைத் தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published:Updated:
பிரதமர் மோடி ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்னை குறித்துப் பல நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், `உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கை மேற்கொள்கிறது' என ரஷ்யா விளக்கமளித்து வருகிறது.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
ட்விட்டர்

இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ``இந்தியா பலமுறை வரலாற்றில் அமைதியைத் தேடித் தந்துள்ளது. இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம். தற்போது ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சைக் கேட்பார் எனத் தெரியவில்லை, ஆனால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி. ரஷ்யாவுடன் அவருக்கு உள்ள உறவைப் பயன்படுத்தி போரை நிறுத்த, புதினுடன் இந்தியப் பிரதமர் மோடி பேச வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism