Published:Updated:

உக்ரைன் போர்: குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஷ்ய வீரர்! - ஆயுள் தண்டனை விதித்த உக்ரைன் நீதிமன்றம்

உக்ரைன் - ரஷ்யா

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் உக்ரைன் மக்களை சுட்டுக்கொன்றதாக ஒப்புக்கொண்ட ரஷ்ய வீரருக்கு, உக்ரைன் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது

உக்ரைன் போர்: குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஷ்ய வீரர்! - ஆயுள் தண்டனை விதித்த உக்ரைன் நீதிமன்றம்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் உக்ரைன் மக்களை சுட்டுக்கொன்றதாக ஒப்புக்கொண்ட ரஷ்ய வீரருக்கு, உக்ரைன் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதியன்று உக்ரைனில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் தொடங்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைனில், ரஷ்யப் படை வீரர்கள் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ராணுவ வீரர்களைத் தாண்டி பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, உலக நாடுகளிடம் முறையிட்டுவருகிறது.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில், முதன்முறையாக ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. உக்ரைன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் போர்க்குற்ற விசாரணையில், ரஷ்யப் படையைச் சேர்ந்த டேங்க் கமாண்டர் வாடிம் ஷிஷிமரின் (27), கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று உக்ரைனின் வடகிழக்கு கிராமமான சுபாகிவ்காவில், 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவைத் தான் சுட்டுக் கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில், வாடிம் ஷிஷிமரினுக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism