Published:Updated:

ரஷ்யத் தாக்குதலால் பவர் கட்; குழந்தைக்கு டார்ச் வெளிச்சத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகரில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதில் அங்கு மின்சாரக் கட்டமைப்புகள் சிதைந்திருக்கின்றன.

ரஷ்யத் தாக்குதலால் பவர் கட்; குழந்தைக்கு டார்ச் வெளிச்சத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகரில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதில் அங்கு மின்சாரக் கட்டமைப்புகள் சிதைந்திருக்கின்றன.

Published:Updated:
குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், பலனளிக்காமல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக உக்ரைன்மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கும் ரஷ்யா, புதன்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது.

இது குறித்து கீவ் நகர் மேயர் செய்தியாளர்களிடம், ``தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கிறோம். மக்கள் அனைவரும் பதுங்கு குழியிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். நகரின் முக்கியக் கட்டமைப்பு தாக்குதலுக்குள்ளாகவிருக்கிறது" என்று எச்சரித்திருந்தார். ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகரில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதில் அங்கு மின்சாரக் கட்டமைப்புகள் சிதைந்திருக்கின்றன.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது, மின்சாரம் தடைப்பட்டதால் மருத்துவர்கள் தங்களிடமிருந்த பேட்டரி டார்ச் மற்றும் பவர் ஜெனரேட்டரின் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகத் தெரிகிறது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வீடியோவிலுள்ள மருத்துவர்களில் ஒருவர், ``இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள எங்களிடம் மின்சார வசதி கிடையாது. அதனால் நாங்கள் எங்களிடம் இருக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தோம். இது இரண்டு இதய வால்வுகளை மாற்றுவதற்கான கார்டியோபல்மோனரி பைபாஸ் எனும் அறுவை சிகிச்சை" எனத் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்கள் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.