Published:Updated:

`பாலியல் வன்கொடுமை... சிறுமிகளின் உடலில் `ஸ்வஸ்திகா' முத்திரை!' - உக்ரைன் எம்.பி குற்றச்சாட்டு

உக்ரைன் ( ட்விட்டர் )

உக்ரைனில் கொடுமையான முறையில் சிறுமிகள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களில் ஸ்வஸ்திகா என்ற முத்திரை இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

`பாலியல் வன்கொடுமை... சிறுமிகளின் உடலில் `ஸ்வஸ்திகா' முத்திரை!' - உக்ரைன் எம்.பி குற்றச்சாட்டு

உக்ரைனில் கொடுமையான முறையில் சிறுமிகள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களில் ஸ்வஸ்திகா என்ற முத்திரை இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Published:Updated:
உக்ரைன் ( ட்விட்டர் )

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரேனியர்கள் இந்தப் போரால் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். ரஷ்யா ஈவு இரக்கமின்றி பொது மக்களை சுட்டு கொல்வதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் இது குறித்து, ``ரஷ்ய வீரர்கள் 10 வயது நிரம்பிய சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமிகளின் உடலில் ‘ஸ்வஸ்திகா வடிவ’ தீக்காயங்களுடன் கூடிய முத்திரை குத்தியுள்ளனர்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, உக்ரைன் எம்.பி லெசியா வாசிலென்க் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``ரஷ்ய வீரர்கள் போரைப் பயன்படுத்தி உக்ரைன் மக்களிடமிருந்து கொள்ளையடித்தனர்.10 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடலில் ஸ்வஸ்திகா வடிவ தீக்காயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது. ரஷ்ய ராணுவம்தான் இதைச் செய்துள்ளது. ரஷ்யா ஒழுக்கமற்ற குற்றவாளிகளின் தேசமாக இருக்கிறது. இவை அனைத்தையும் பார்த்தும் நான் பேசாமல் இருக்கிறேன். என்னுடைய மனம் கோபத்தாலும், பயத்தாலும், வெறுப்பாலும் செயலிழந்துவிட்டது'' எனப் பதிவிட்டுள்ளார். மேலும், கொல்லப்பட்ட சிறுமிகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism