Published:Updated:

உக்ரைன்: கைகள் கட்டப்பட்டு தோட்டாக்கள் பாய்ந்த உடல்கள்... குடிமக்களையும் கொன்று குவிக்கிறதா ரஷ்யா?!

போரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உக்ரேனியர் பலி

``புச்சாவில் ரஷ்யப் படைகள் குற்றம் செய்ததாக உக்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் ஒரு ஆத்திரமூட்டும் செயல்” - ரஷ்யா

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 5 வாரங்களுக்கு மேலாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உலகை உலுக்கின. மேலும் இதுவரையில் சுமார் 4 மில்லியன் உக்ரேனியர்கள் இந்தப் போரால் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சமீபத்தில் ஐ.நா கூறியிருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் புச்சா நகரில், கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தபடி கண்டெடுக்கப்படும் உடல்கள், குடிமக்களையும் ரஷ்யா கொன்று குவிக்கிறதா? என்ற கேள்வியைப் பலரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் நடந்து வரும் போரில் தெருக்களில் இறந்து கிடைக்கும் உக்ரேனியர்கள்
உக்ரைனில் நடந்து வரும் போரில் தெருக்களில் இறந்து கிடைக்கும் உக்ரேனியர்கள்

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மொத்தம் 3 உடல்கள் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து புச்சாவின் துணை மேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி, கடந்த வாரம் ரஷ்யப் படையினர் அப்பகுதியிலிருந்து வெளியேறிய பிறகு குடியிருப்பாளர்களில் 50 பேர் ரஷ்யப்படையினர் நடத்திய கொலைத்தாக்குதலில் உயிரிழந்ததாக ரஷ்யா மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

பின்னர் இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், புச்சாவில் ரஷ்யப் படைகள் குற்றம் செய்ததாக உக்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் ஒரு ஆத்திரமூட்டும் செயல். மேலும், புச்சாவில் வசிப்பவர்கள் யாரும் ரஷ்யப் படைகளால் வன்முறைக்கு ஆளாகவில்லை. மேலும், மார்ச் 30 அன்று ரஷ்யப் படையினர் வாபஸ் பெறுவதற்கு முன்பு, அவர்கள் 452 டன் மனிதாபிமான உதவிகளை கீவ் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு வழங்கினர் என்று கூறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைன்: கைகள் கட்டப்பட்டு தோட்டாக்கள் பாய்ந்த உடல்கள்... குடிமக்களையும் கொன்று குவிக்கிறதா ரஷ்யா?!

இந்த சம்பவம் குறித்து வெளியான புகைப்படங்களில், ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு வெள்ளைத்துணியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரற்று கிடந்தார். இதுகுறித்து உக்ரேனிய பெண்மணி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், உள்ளூர் வாசிகள் தங்களை அடையாளம் காட்டுவதற்காக இதுபோன்ற வெள்ளைத் துணிகளைப் பயன்படுத்தியதாக கூறினார். மேலும் அதைச்சுற்றியுள்ள வேறொரு பகுதியில் கல்லறை அருகே கண்களில் சுடப்பட்டவாறு இரண்டு ஆண் சடலங்கள் கிடந்தது பற்றி ராய்ட்டர்ஸிடம் பேசிய பெண் ஒருவர், அவர்கள் இருவரும் ரஷ்யப் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism