Published:Updated:

உக்ரைன்: ரஷ்யாவிடமிருந்து மீட்டெடுத்த பகுதி; விபத்தில் சிக்கிய ஜெலன்ஸ்கியின் கார் - என்ன நடந்தது?

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

கார்கிவ் பகுதியிலிருந்து கியேவ் வழியாகச் சென்றபோது ஜெலன்ஸ்கியின் கார்மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

உக்ரைன்: ரஷ்யாவிடமிருந்து மீட்டெடுத்த பகுதி; விபத்தில் சிக்கிய ஜெலன்ஸ்கியின் கார் - என்ன நடந்தது?

கார்கிவ் பகுதியிலிருந்து கியேவ் வழியாகச் சென்றபோது ஜெலன்ஸ்கியின் கார்மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

Published:Updated:
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அவரின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிஃபோரோவ், "ரஷ்யப் படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கார்கிவ் பகுதியிலிருந்து கியேவ் வழியாகச் சென்றபோது ஜெலன்ஸ்கியின் கார்மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

உடனே, அதிபருடன் வந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பிறகு பலத்த காயம் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், டிரைவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்த அனைத்துச் சூழ்நிலைகளையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரிப்பார்கள்" என அவரது அதிகாரபூர்வ முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

விபத்து நடந்த சில மணி நேரத்தில் ஜெலன்ஸ்கியின் இரவுத் தொலைக்காட்சி உரையில், ``கார்கிவ் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான் திரும்பி வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்து ஏற்பட்டது. ரஷ்ய ராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கான எதிர்த் தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுப் பிராந்தியமும் நமது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. நமது வீரர்களின் உழைப்பால், உக்ரேனியர்கள் மீண்டும் நினைத்ததைச் செய்ய முடிந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.