Published:Updated:

உக்ரைன்: லட்சக்கணக்கில் அகதிகளாகும் மக்கள்... கடும் குளிரிலும் குழந்தைகளுடன் ஆற்றைக் கடக்கும் சோகம்!

உக்ரைன் மக்கள் ( ட்விட்டர் )

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 1 முதல் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக மாற வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் குடிமக்கள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு தங்கள் உறவுகளுடன் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு கடந்த வியாழன் அன்று மட்டும் 3,68,000 மக்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 1 முதல் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக மாற வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் நுழையும் உக்ரேனிய அகதிகள்
ருமேனிய எல்லையில் நுழையும் உக்ரேனிய அகதிகள்
ட்விட்டர்

இந்த நிலையில், உக்ரைனின் சைரட் எல்லையில் ருமேனியாவிற்குள் செல்ல மைல் கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன. அதனால், ருமேனியாவுக்குள் நுழையப் பெண்களும் குழந்தைகளும் டனுபே ஆற்றைக் கடந்து உறைய வைக்கும் பனிக்கு நடுவில் ருமேனியாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

அவர்களுக்குத் தேவையான உதவிகளை இரு நாட்டு அரசும், சமூக ஆர்வலர்களும் செய்து வருகின்றனர். மேலும், உக்ரைனிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ள போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism