Published:Updated:

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகியின் சர்ச்சைக் கருத்து... அரபு நாடுகள் கண்டனம்!

அரபு நாடுகள்

இந்திய தூதர் தீபக் மிட்டல், "இந்த கருத்துகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின்படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது" எனக் கூறினார்.

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகியின் சர்ச்சைக் கருத்து... அரபு நாடுகள் கண்டனம்!

இந்திய தூதர் தீபக் மிட்டல், "இந்த கருத்துகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின்படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது" எனக் கூறினார்.

Published:Updated:
அரபு நாடுகள்

பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டல் ஆகியோர் நபிகள் நாயகம் தொடர்பாகக் கூறிய கருத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக ட்வீட் செய்தார். அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.

இந்த நிகழ்வுகள் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் சர்ச்சை ஆகியுள்ளன. இந்தியப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் அரபு நாடுகளில் டிரெண்ட் ஆனது. இரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்தக் கருத்துகளுக்கு எதிராகத் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரான தீபக் மிட்டலை அழைத்துப் பேசி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், `நபிகள் நாயகத்துக்கு எதிராக இந்தியாவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக இந்திய அரசின் கண்டனத்தையும், பொது மன்னிப்பையும் எதிர்பார்க்கிறோம். இப்படி இஸ்லாமியத்துக்கு எதிரான பேச்சுகளை எந்தவித தண்டனையும் இல்லாமல் அப்படியே விடுவது மனித உரிமைகளுக்கு ஆபத்தாக அமைவதோடு, பாரபட்சத்துக்கும் ஓரவஞ்சனைக்கும் வழிவகுக்கும், அது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு பதில் அளித்த இந்திய தூதர் தீபக் மிட்டல், "இந்த கருத்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது" எனக் கூறியதோடு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகியின் சர்ச்சைக் கருத்து... அரபு நாடுகள் கண்டனம்!

குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய தூதரான சிபி ஜார்ஜிடம் தங்களது கண்டனத்திற்கான அறிக்கையை வழங்கியது. அதில் அவர்களின் பேச்சை முற்றிலும் மறுப்பதோடு கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில மணிநேரங்களுக்கு பிறகு ஈரானும் தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கத்தார், குவைத் ஆகிய இரு நாடுகளும் பா.ஜ.க எடுத்த பதில் நடவடிக்கையை வரவேற்றுள்ளன. பா.ஜ.க அவதூறாக பேசிய நவீன் குமார் ஜிண்டலை கட்சியை விட்டு நீக்கியும், நுபுர் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism