Published:Updated:

தைவான் அருகே பறந்த ஏவுகணைகள்; அமெரிக்கா கண்டனம் - போர்ப் பயிற்சி பெயரில் நெருக்கடி அளிக்கும் சீனா

சீனா ஏவுகணைப் பயிற்சி ( ட்விட்டர் )

போர்ப் பயிற்சி தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகளில் நடப்பதாகக் கூறப்படுகிறது.

தைவான் அருகே பறந்த ஏவுகணைகள்; அமெரிக்கா கண்டனம் - போர்ப் பயிற்சி பெயரில் நெருக்கடி அளிக்கும் சீனா

போர்ப் பயிற்சி தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகளில் நடப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
சீனா ஏவுகணைப் பயிற்சி ( ட்விட்டர் )

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது சீனா. இதனால் தைவானைச் சுற்றி மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை நேற்று தொடங்கியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் போர்ப் பயிற்சிகள் தைவான் தீவைச் சுற்றியுள்ள கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், ஆறு முக்கியப் பகுதிகளில் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயிற்சி காலகட்டத்தில், நீர் மற்றும் வான்வெளிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழையக் கூடாது எனவும் சீனா கூறியிருந்தது. தைவான் அமைச்சரவை தைவானின் விமான தகவல் மண்டலத்தின் (எஃப்ஐஆர்) வழியாகச் செல்லும் 18 சர்வதேச வழித்தடங்களை இந்தப் பயிற்சி சீர்குலைக்கும் என்றும், அதனால் தைவான் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் இந்தப் பயிற்சிகளை உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும் கூறியது.

தைவான் - அமெரிக்கா
தைவான் - அமெரிக்கா
ட்விட்டர்

இந்த நிலையில், சீன ராணுவம் 11 டோங்ஃபெங் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பல பகுதிகளில் ஏவியிருக்கிறது. இது தைவானின் அமைதியைக் பறிக்கும் பகுத்தறிவற்ற நடவடிக்கை என்று, இந்த ராணுவப் பயிற்சிகளை தைவான் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஏவுகணைகள் எந்தத் தீவின் மீது பறந்தன, எங்கே விழுந்துள்ளன என்பதை தைவான் தெரிவிக்கவில்லை.

ஏவுகணைகளை ஏவி சீனா போர்ப் பயிற்சி செய்வது தொடர்பாக ஜப்பான், சீனாவின் ஒன்பது ஏவுகணைகளில் நான்கு தைவானின் முக்கியத் தீவின் மீது பறந்ததாகத் தகவல் தெரிவித்திருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனா ஏவுகணை பயிற்சி
சீனா ஏவுகணை பயிற்சி
ட்விட்டர்

இது தொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம்," நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றதற்கு மிகையான எதிர்வினையாக, தைவானைச் சுற்றி 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவுவதை அமெரிக்கா கடுமையாகக் கண்டிக்கிறது. தைவான் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசின் வருகையை ஒரு சாக்காகவைத்து, அதை மிகைப்படுத்தவும் பயன்படுத்தவும் முடிவு செய்திருக்கிறது. ஆனால் பதற்றங்களைக் குறைக்க, சீனா ராணுவப் பயிற்சிகளை நிறுத்துவதன் மூலம் மிக எளிதாக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.