Published:Updated:

`மனித உரிமை மீறல்’ - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைக் கண்டித்த இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம்

இல்ஹான் ஓமர் ( ட்விட்டர் )

சிறுபான்மையினர் இலக்குவைத்துத் தாக்கப்படுவது உட்பட, மனித உரிமை மீறல்கள், சர்வதேச மத சுதந்திர மீறல்களை இந்தியா தொடர்ந்து செய்துவருகின்றன.

`மனித உரிமை மீறல்’ - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைக் கண்டித்த இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம்

சிறுபான்மையினர் இலக்குவைத்துத் தாக்கப்படுவது உட்பட, மனித உரிமை மீறல்கள், சர்வதேச மத சுதந்திர மீறல்களை இந்தியா தொடர்ந்து செய்துவருகின்றன.

Published:Updated:
இல்ஹான் ஓமர் ( ட்விட்டர் )

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான இல்ஹான் ஓமர் என்ற பெண், பாகிஸ்தானுக்குச் சென்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் பயணம் செய்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குப் பயணம் செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்தப் பகுதிக்கு அவர் பயணம் செய்தது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியது.

இந்த நிலையில், காங்கிரஸ் பெண்களான ரஷிதா தாலிப், இல்ஹான் ஓமர், ஜுவான் வர்காஸ் ஆகியோரால் இயற்றப்பட்ட தீர்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அதன்மீது தேவையான நடவடிக்கைக்காக வெள்ளை மாளிகை வெளியுறவுக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அமெரிக்க 
 வெள்ளை மாளிகை
அமெரிக்க வெள்ளை மாளிகை

அந்தத் தீர்மானத்தில், ``இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பிற மத மற்றும் கலாசாரச் சிறுபான்மையினர் இலக்குவைத்துத் தாக்கப்படுவது உட்பட மனித உரிமை மீறல்கள், சர்வதேச மத சுதந்திர மீறல்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதை இந்தத் தீர்மானம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவில் மதச் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது குறித்து இந்தத் தீர்மானம் மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. எனவே, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தை மீறும் இந்தியாமீது அக்கறைகொள்ள, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism